மேலும் அறிய
வாக்களித்த விரலை காண்பித்தால் 10 சதவீதம் தள்ளுபடி
வாக்குப்பதிவு அன்று வாக்களித்த விரலை காண்பித்தால் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கவிருப்பதாக மதுரையில் பிரபல உணவு விடுதி அறிவித்துள்ளது.
வாக்கு உரிமையை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்புகளும் தங்கள் பங்கிற்கு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பான அறிவிப்புகளை வெளியிடும் மதுரை டெம்பிள் சிட்டி உணவகம், தற்போது வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுவித அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வாக்குப்பதிவு நாளன்று வாக்களித்ததற்கான அடையாளமாக விரல் மையுடன் வந்தால் அவர்களுக்கு தங்கள் நிறுவனம் சார்பில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 100 சதவீதம் வாக்கு பதிவை ஊக்குவிக்கும் விதமாக இந்த சலுகையை அறிவித்துள்ளதாக கூறியுள்ள டெம்பிள் சிட்டி உரிமையாளர் குமார், ‛தனது அனைத்து கிளைகளிலும் இந்த சலுகை நடைமுறைப்படுத்தப்படும்,’ என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஜோதிடம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion