மேலும் அறிய

ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறும் ரயில் டிக்கெட் பரிசோதனையில் அடுத்தடுத்து வடமாநிலத்தவர்கள் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்யும் போது உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளோமா என்பதை டிக்கெட் பரிசோகதர்கள் சோதனை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் இந்த பரிசோதனை கட்டாயம் நடைபெறும் என்பதால் பிளாட்பார்ம் டிக்கெட், பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சென்றால் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். 

ஆனால் வடமாநிலங்களுக்கு பயணப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில மக்கள் டிக்கெட் எடுக்காமலும், முன்பதிவு செய்யப்பட்டவர்களின் இடங்களிலும் அமர்ந்து கொண்டு பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக தொடர்ந்து பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் ரயில்வே துறை சார்பில் அவ்வப்போது பரிசோதனை நடைபெற்று அபராதம் மற்றும் அதனை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். 

ரயிலில் ஓசி பயணம்.. சிக்கும் வடமாநிலத்தவர்கள்... லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூருவிலிருந்து பாட்னா வரை இயக்கப்படும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் பெரம்பூர் ரயில் நிலையம் வந்த போது ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கானோர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களை மொத்தமாக பிடித்த காவல்துறையினர், 683 பேரிடம் இருந்து சுமார் ரூ.3,38,560 வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு ரயிலிலேயே இவ்வளவு என்றால் வடக்கு நோக்கி செல்லும் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் செல்லும் பயணிகளால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீஹாரில் சென்னை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. அப்போது பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாக ரூ.51,540 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே ரயில் காட்பாடி செல்வதற்குள் மீண்டும் ரயிலில் அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை நடத்தினர். 

இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 199 பேரிடம் இருந்து ரூ. 1, 05, 500 வசூல் செய்யப்பட்டது. இப்படி கொத்துக் கொத்தாக அடுத்தடுத்து டிக்கெட் எடுக்காமல் வடமாநிலத்தவர்கள் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget