மேலும் அறிய

125 நாள் வேலை உறுதித் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துமா? என்பது குறித்து முதலமைச்சர் உடனடியாகத் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துமா? என்பது குறித்து முதலமைச்சர் உடனடியாகத் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியா முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான திட்டத்தை (Viksit Bharat - Guarantee for Rozgar and Ajeevika Mission -Gramin) செயல்படுத்துவதற்கான காலக்கெடு நெருங்கியுள்ள நிலையில், இதுவரை 19 மாநிலங்கள் மட்டுமே இதற்கான அறிவிக்கையை  வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை செயல்படுத்துமா? என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாட்டில் இத்திட்டப்படி வேலை வழங்கப்படுமா? என்ற வினா எழுந்துள்ளது.

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ள மத்திய அரசு, 125 நாள் வேலைத் திட்டம் என்ற புதியத் திட்டத்தை வரும் ஜூலை 1&ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.இந்தத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு  ரூ.7,957.57 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்கள் உள்ளிட்ட 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கை வெளியிட்டுள்ளன.

தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் தெலுங்கானம்,  கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதா அல்லது இத்திட்டத்தின் அம்சங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதா? என்பது குறித்து கலந்தாய்வு நடத்தி வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பட்சத்தில், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான மாநிக அரசின் சார்பில் தனி வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தெலுங்கானம் மாநிலம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் மாநில அரசுகளின் பங்கு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்; அதுமட்டுமின்றி எந்த வகையான பணிகளை மேற்கொள்வது என்பதைத் தீர்மானிப்பதில் மத்திய அரசுக்கு தான் அதிக அதிகாரம் உண்டு என்பதால், இத்திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதா, அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பதா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம்  தமிழக அரசுக்கு உண்டு. அரசின் நிலைப்பாடு எதுவாயினும் அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி  ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதன் பங்காக 40% தொகை ரூ.5305.04 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்மூலம் இந்தத் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.13,262.61 கோடி கிடைக்கும். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு நாள் வேலை வழங்க ரூ.479.49 செலவாகும் நிலையில், தமிழகத்திற்கான மொத்த நிதியைக் கொண்டு  27.68 கோடி மனித வேலைநாள்களை ஏற்படுத்த முடியும். தமிழ்நாட்டில் 69.76 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து வேலை செய்து வரும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 39.69 நாள்கள் வேலை வழங்க முடியும். 2021&22 முதல் 2024&25ஆம் ஆண்டு வரை சராசரியாக முறையே 50.95, 50.96, 59.44,  46.86 நாள்கள் வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், நடப்பாண்டில் அதை விட குறைவாகவே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மாராக, இந்தத் திட்டத்தை அறிவிக்கை செய்யாவிட்டால், தமிழ்நாட்டில் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு  ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1791.33 கோடியில் செலவிடப்பட்ட ரூ.1350.43 கோடி போக மீதமுள்ள ரூ. 440.90 கோடியை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தத் தொகையைக் கொண்டு சராசரியாக 1.30 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். அதன்பின் தமிழக அரசு அதன் சொந்த நிதியைக் கொண்டு தான் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டியிருக்கும்.

எனவே, 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா? என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதில்லை என முடிவு செய்தால், த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டவாறு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்குவதற்கான மாற்றுத் திட்டம் என்ன? என்பதையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
மழைநீர் வீணாவதைத் தடுக்க மெகா பிளான்: விழுப்புரம் அதிகாரிகளுக்கு கலெக்டர் கொடுத்த கெடு!
மழைநீர் வீணாவதைத் தடுக்க மெகா பிளான்: விழுப்புரம் அதிகாரிகளுக்கு கலெக்டர் கொடுத்த கெடு!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget