மேலும் அறிய
Advertisement
'ஆன்லைன் ஆதீனமாக' மாறும் நித்தியானந்தா...!- பொருட்படுத்தாத மதுரை ஆதீன நிர்வாகம்...!
’நித்தியானந்தா என்ன கூப்பாடு போட்டாலும் எடுபடாது. வரும் 23ம் தேதி சுந்தர மூர்த்தி தம்பிரானுக்கு முறைப்படி ஆதீனமாக முடி சூட்டப்படும்"
மதுரை ஆதினத்தின் 292-வது ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 13ஆம் தேதி மறைந்த நிலையில் மதுரை ஆதினத்தின் '293-வது பீடாதிபதி நான் தான்' என கூறி கடந்த சனிக்கிழமை முதல் ’கைலாசா நாடு’ என்ற பெயரில் தினசரி நித்யானந்தா தனது முகநூலில் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தான் மதுரை ஆதீனத்தின் 293-வது சன்னிதானமாக பதவியேற்று கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏற்கனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தான் ஆதீனமாக பொறுப்பேற்ற நிலையில் கைலாசா நாட்டு ஆதீன மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்தும் 8 பக்க அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கை தொடர்பாக சீடர்களின் மூலம் வீடியோவாக வெளியிட்டு விளக்கம் அளித்தும்வரும் நித்யானந்தா மதுரை ஆதினத்தின் 292-வது சன்னிதானமான அருணகிரிநாதர் மறைவை அடுத்து கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிப்பதாகவும், 293- மதுரை ஆதீனம் என கூறி தனக்கான பெயரை 293-வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை ஆதினத்தின் 292-வது சன்னிதானம் மறைந்த நிலையில் 293-வது மடாதிபதியான 'ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்' எனப்படும் சுந்தர மூர்த்தி தம்பிரான் நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகம் நடத்தப்பட்டு விரைவில் பட்டம் சூட்ட உள்ள நிலையில் நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
இது குறித்து மதுரை ஆதீனம் ஊழியர்கள் சிலர் நம்மிடம்...," கடந்த 2012-இல் மதுரை நித்தியானந்தாவை ஆதீனமாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் அவர் மீது கடும் சர்ச்சை எழுந்த உடன் அதனை திரும்பப் பெற்றார். உயர்நீதிமன்றமும் நித்தியானந்தாவை ஆதீனத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருந்தது. தற்போது கைலாசாவிற்கு தப்பி ஓடிய நித்தியானந்தா மதுரை ஆதீனத்தை சொந்தம் கொண்டாட நினைத்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அருணகிரிநாதர் முறையாக 293 ஆதீனத்தை அறிவித்துவிட்டார். அதனால் நித்தியானந்தா என்ன கூப்பாடு போட்டாலும் எடுபடாது. வரும் 23ஆம் தேதி சுந்தர மூர்த்தி தம்பிரானுக்கு முறைப்படி ஆதீனமாக முடி சூட்டப்படும்" என்றனர்.
மேலும் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - T20 World Cup 2021 Schedule: டி-20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு ; இந்தியா, பாக்., மோதும் நாள் இதுதான்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion