மேலும் அறிய

TN Election BJP Defeat: 35 தொகுதியில் 34-ல் கருகிய தாமரை.! வீழ்ச்சியை சந்தித்த பாஜக - காரணம் என்ன.?

TN Election BJP Defeat : தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னம் போட்டியிட்ட 35 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் பாஜகவின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

அதிமுகவின் கூட்டணி வியூகம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியில் இருந்த திமுக தோல்வியை சந்தித்துள்ளது. எதிர்கட்சியாக இருந்த அதிமுகவும் படு தோல்வியை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த அவர், அடுத்ததாக பாமக மற்றும் அமமுகவை கூட்டணியில் இணைத்தார். பாஜகவிற்கு 27 தொகுதிகளை ஒதுக்கினார். பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. 

35 தொகுதிகளில் பாஜக போட்டி

இதில் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவிற்கு 2 தொகுதிகளும், தமமுகவிற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. எனவே இந்த கட்சிகள் எல்லாம் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. எனவே ஒட்டுமொத்தமாக 35 தொகுதிகளில் பாஜகவின் சின்னம் களம் இறங்கியது. கடந்த முறை 4 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டது. இதற்கு ஏற்றார் போல மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வேட்பாளராக போட்டியிட்டனர். பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மூத்த தலைவர்களை களம் இறக்கிய பாஜக

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. மீதமுள்ள 34 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னம் கருகியது. அதிலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை, வானதி சீனிவாசன் தோல்வி அடைந்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக அதிமுக- பாஜக கூட்டணியில் தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாதது.

பாஜக தோல்விக்கு காரணம் என்ன.?

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் செயல்பாட்டால் பாஜக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி இருந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கி விட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக நியமித்ததை பாஜக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் தவெகிற்கு ஆதரவாக வாக்களித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் எப்போதும் பாஜக மீதான எதிர்ப்பும் தோல்விக்கு முக்கிய காரணமாக வழிவகுத்துள்ளது. மற்ற மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக தமிழகத்தில் தொடர் பின்னடைவை சந்தித்துள்ளதால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget