மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Annapoorani Arasu | திடீர் அம்மன் அன்னபூரணியின் கணவர் அரசு என்ன ஆனார்? தகவல்களை அள்ளித்தட்டும் நெட்டிசன்கள்!

அன்னபூரணி கதை தான் இன்றைக்கு தமிழகமே பேசும் கதை. இணையம் தொடங்கி அடுத்தவீட்டு வாசல் வரை களைகட்டிக் கொண்டிருக்கிறது

அன்னபூரணி கதை தான் இன்றைக்கு தமிழகமே பேசும் கதை. இணையம் தொடங்கி அடுத்தவீட்டு வாசல் வரை களை கட்டிக் கொண்டிருக்கிறது அன்னபூரணி கதை. இதுவரை அன்னபூரணியை பற்றி மட்டும் பேசிய இணைய உலகம் இப்போது அவரது கணவர் அரசு பற்றியும் பேசத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் ஸோ கால்ட் ஆன்மீகவாதிகளில் புது வரவு... ‛அன்னபூரணி அரசு அம்மா’. நேற்று ஒரே நாளில், ஊரில் இருக்கும் ஒட்டுமொத்த பேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டிலும் இடம் பிடித்த பெயர்.  ‛அன்னபூரணி அரசு அம்மா’ புத்தாண்டில் புதுப்பொலிவுடன் அறிமுகமாகிறார் போலும். அதற்காக செங்கல்பட்டில் தரிசன ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. ‛அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே’ என்று தலைப்பிட்டு அவர்களே அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ‛அம்மாவின் திவ்ய தரிசனம்’ ஜனவரி 1, 2022 அன்று ‛தாயின் பாத கமலங்களில் தஞ்சமடைவோம்’ என்கிறார்கள் அந்த அறிவிப்பில்.  

இப்படியிருக்க இன்றைய அன்னபூரணி டெவலப்மென்ட் அவரது கணவர் அரசுவைப் பற்றி.

Annapoorani Arasu | திடீர் அம்மன் அன்னபூரணியின் கணவர் அரசு என்ன ஆனார்? தகவல்களை அள்ளித்தட்டும் நெட்டிசன்கள்!

யார் இந்த அரசு?
ஆதிபராசக்தி அம்மா அவதாரம் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி அரசு என்பவருடன் வாழ்ந்து வந்தார். அரசுவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. அவருடைய மனைவி பெயர் லெட்சுமி. இந்நிலையில் அரசுக்கும் அன்னபூரணிக்கும் இடையே கசப்பு ஏற்பட பிரச்சினை சொல்வதெல்லாம் உண்மைக்கு நிகழ்ச்சிக்கு வந்தது. அங்கே லட்சுமி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்து செய்யப்பட்டது ஊர் அறிந்ததே. அதற்குப் பின்னர் நடந்தது தான் மர்மமாகவே இருக்கிறது. அரசு என்ற நபரின் இயற்பெயர் கார்த்திகேயனாம். அவருக்கு இயல்பாகவே ஆன்மீக நாட்டம் அதிகமாம்.

2016, 2017 காலக்கட்டங்களில் கார்த்திகேயன் தீவிர ஆன்மீகவாதியாக இருந்துள்ளார்.  இயற்கை ஒலி(ளி) என்ற அமைப்பைத் தொடங்கிய கார்த்திகேயன் என்ற அரசு ஆன்மீகப் போர்வையில் ஏவல், பில்லி, சூனியம் செய்துவந்தார். அவ்வப்போது அவர் தொடங்கிய வலைப்பக்கத்தில் ஆன்மீகத் தகவல்களையும் பகிர்ந்து வந்தார். "தன்னை நோக்கி வரும் பிரச்சனைகளை கண்டு துவண்டு இறைவனிடம் சென்று மன்றாடி அழுது புலம்புவதல்ல ஆன்மிகம். பிரச்சனைகளுக்குள் புகுந்து தன்னை அது எந்த விதத்திலும் பாதிக்காதபடி விளையாடிப் பார்ப்பதே ஆன்மிகம்" என்பதுதான் இவருடைய பிளாகின் சாராம்சம். அவரது எழுத்துக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அதில் அரசு பரிந்துரைத்த பூஜைகளை அப்படியே செய்தவர்களும் உண்டு எனக் கூறப்படுகிறது.

உண்மையில் அரசால்தான் அன்னபூரணி ஆன்மீக பாதைக்கு வந்தாராம். ஆனால் 2017-ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசு என்ன ஆனார் என்பது தான் இப்போது புரியாத புதிர். தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அன்னபூரணி, தனது கணவர் அரசு இறந்துவிட்டார் என்றும் அவரது சக்தி எல்லாம் தனக்குள் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். அப்படியென்றால் அரசுவின் மரணம் எப்படி நடந்தது. அது இயற்கை மரணமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இனி அரசு பற்றி போலீஸ் விசாரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?
IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Embed widget