மேலும் அறிய

Yercaud Bus Accident: ஏற்காடு தனியார் பேருந்து விபத்துக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளியான தகவல்!

அதிக அளவிலான பயணிகளை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக வளைவில் வந்ததால் ஸ்டேரிங் ராடு உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் தனியார் பேருந்து எழுவது பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர் இயக்கி வந்தார். ஏற்காட்டில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மாலை 5:40 மணிக்கு மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 13 வது கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவு தாண்டி, பதினோராவது கொண்டை ஊசி வளைவின் அருகில் விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Yercaud Bus Accident: ஏற்காடு தனியார் பேருந்து விபத்துக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளியான தகவல்!

5 பேர் பலி:

இந்த விபத்தில் முனீஸ்வரன் என்ற 11 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிக காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சந்தோஷ் பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்து விபத்துக்குள்ளான 65 பேர் உடனடியாக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் கார், வேன்கள் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். 

விபத்திற்கான காரணம்:

அதிக அளவிலான பயணிகளை ஏற்றியதாலும், அதிவேகத்தில் இயக்கப்பட்டதாலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. குறிப்பாக மலைப்பாதைகளில் செல்லும் பேருந்துகளில் பாதுகாப்பிற்காக ஒரு கதவுகள் மட்டுமே இருக்கும். மேலும், சாதாரண பேருந்தை விட மலைகளில் செல்லும் பேருந்துகளில் சீட் குறைவாகவே இருப்பது வழக்கம். இதேபோன்று மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் நின்று கொண்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது என பல்வேறு விதிமுறைகள் இருந்தும், அதிக அளவிலான பயணிகளை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக வளைவில் வந்ததால் ஸ்டேரிங் ராடு உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

Yercaud Bus Accident: ஏற்காடு தனியார் பேருந்து விபத்துக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளியான தகவல்!

கூடுதல் பேருந்து தேவை:

சேலத்தில் இருந்து பல்வேறு தொழிலாளிகள் தினம் தோறும் காலையில் ஏற்காடு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பேருந்து பயணம் செய்கின்றனர். வேறு வழியின்றி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட அளவைவிட பயணிகளை அதிகமாக ஏற்றி செல்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சான்றுகின்றனர். 

மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

இதனிடையே மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget