மேலும் அறிய

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சிறப்பு தொழில் கடன் முகாமில் நீங்களும் பங்கேற்கலாம் - முழு விவரம் !

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவிகிதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவிகிதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது- மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.

சிறப்பு தொழில் கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு, உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது (Lending Plus Service Provide to MSME).

தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்

சிவகாசி கிளை அலுவலகத்தில் (முகவரி:- 98/சி4 சேர்மன் சண்முக நாடார் ரோடு, 2 வது தளம், சிவகாசி, விருதுநகர் மாவட்டம் 626 123) குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது. மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.2125/- கோடியாக நிர்ணயத்து முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் கடன் இலக்காக ரூ.61.00 கோடி இலக்குடன் பணியாற்றி வருகிறோம்.

  வட்டிமானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது

இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. (TIIC)யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் (Kalaingar Green Energy Scheme) போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். கூடுதல் மானியமாக 10 சதவிகிதம் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 சதவிகிதம் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனபடுத்துவதற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 சதவிகிதம் வட்டிமானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்

 மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவிகிதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவிகிதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு கிளை மேலாளர் - 9445023477, திட்ட அலுவலர்கள் - 9500301892, 8838195375, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget