மேலும் அறிய

National Girl Child Award: தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம் - எப்படி தெரியுமா ?

விழுப்புரம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனிற்காக செயல்பட்டவர்கள் தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனிற்காக செயல்பட்டவர்கள் தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் “பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) அன்று “தேசிய பெண் குழந்தை விருது” வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு ஒரு இலட்சத்திற்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும்.

இவ்விருத்திற்கு தகுதிகளான கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்

  • பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்
  • பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
  • பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்
  • வேறு ஏதாவது வகையில் சிறப்பான-தனித்துவமான சாதனை செய்திருத்தல்
  • பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை எற்படுத்தியிருத்தல்
  • ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்

விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுகுழ மூலம் பரிசீலனைக்கு செய்யப்பட்டு அனைத்து தகுதிகள் பெற்ற பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு வரும் ஜனவரி 24-ம் தேதி மாநில விருது வழங்கப்படும். இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் அறை எண்.26 மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்பிக்க இறுதி நாள் 20.11.2023 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget