மேலும் அறிய

தமிழகத்தில் மேலும் ஒரு விமான நிலையம்? - நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்! மத்திய அரசின் பதில் இதுதான்! 

அங்கு இருக்கும் விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? 

உளுந்தூர்ப்பேட்டையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய அரசு முக்கிய பதிலை தெரிவித்துள்ளது. 

விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் இன்று நாடாளுமன்றத்தில் உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.  

அதில், ”உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்கவும்  உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அங்கு இருக்கும் விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? 

உளுந்தூர்பேட்டையில் இருக்கும் விமான ஓடு பாதையை விமான நிலையமாக மாற்றுவதற்கு என்னென்ன கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொள்ள இருக்கிறது? 

உளுந்தூர்பேட்டை விமான ஓடுபாதையை உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா ? அந்த ஆய்வின் பரிந்துரைகள் யாவை?” ஆகிய கேள்விகளை முன் வைத்தார். 

இதற்கு விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார். அந்த பதிலில் “ தமிழ்நாட்டில் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதை பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் ( RCS) உடான் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.  

பிராந்திய இணைப்புத் திட்டமானது தேவையின் அடிப்படையில் ஏலத்தின் அடிப்படையில் விமான நிலையங்கள் அமைப்பதற்கான  நடவடிக்கைகளை எடுக்கும் திட்டமாகும் 

உடான் திட்டத்தின் கீழ் இதுவரை ஐந்து முறை ஏலம் நடத்தப்பட்டுள்ளது.  ஆனால் உளுந்தூர்பேட்டை விமான ஓடு பாதையைப் பயன்படுத்தி அங்கு விமான நிலையம் அமைப்பதற்காக யாரும் ஏலம் கேட்கவில்லை. அதனால் அங்கு விமான நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை”  என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய அரசிடம் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பலமுறை இதுகுறித்து வலியுறுத்தி விட்டேன். உளுந்தூர்பேட்டை விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிகிறது. 

எனவே, ஒன்றிய அரசின் வசம் உள்ள அந்த இடத்தை மாநில அரசு குத்தகைக்குப் பெற்று அங்கு விமான பயிற்சி நிலையமோ, ட்ரோன் உற்பத்தித் தொழிற்சாலையோ, திறந்த வெளி தானியக் கிடங்குகளோ, குளிர்பதனக் கிடங்குகளோ, தொழிற்சாலையோ அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

அரசு பயன்படுத்தாத நிலையில் அந்த இடம் பலராலும் ஆக்கிரமிக்கப்படுவதோடு, ஓடுபாதையும் சேதமாகிக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget