விழுப்புரம்: ரேசன் கார்டு, ஆதார் கார்டு வடிவத்தில் திருமண பரிசு - மணமக்களை அசத்திய நண்பர்கள்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குடும்ப அட்டை, ஆதார் கார்டு வடிவில் திருமண பரிசளித்த நண்பர்கள்
விழுப்புரம்: செஞ்சியில் நண்பரின் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு வடிவில் புகைப்படம் அன்பளிப்பு வழங்கிய நண்பர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த சேகர்-அமுதா தம்பதிகளின் மகன் ராஜா என்பவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மேவளூர்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை-நிர்மலா தம்பதிகளின் மகள் சௌமியா என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி இன்று செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
விழுப்புரம்: குடும்ப அட்டை, ஆதார் கார்டு வடிவில் திருமண பரிசளித்த நண்பர்கள்https://t.co/wupaoCzH82 | #Villupuram #Marriage #Viral pic.twitter.com/CTBtCBpsQU
— ABP Nadu (@abpnadu) January 27, 2023
அப்பொழுது ராஜாவின் நண்பர்கள் வித்தியாசமான முறையில் புதுமண தம்பதிகளை குடும்ப அட்டை வடிவில் புகைப்படமாகவும் நண்பர்களை ஆதார் கார்டு வடிவில் புகைப்படம் இணைத்து வித்தியாசமான முறையில் அன்பளிப்பாக வழங்கிய மணமக்களை வாழ்த்திய நிகழ்வு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்