மேலும் அறிய

விழுப்புரத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்: இருக்கைகளை நிரப்ப கூவிக்கூவி அழைப்பு விடுத்த மாவட்டத் தலைவர்!

காலியாக உள்ள இருக்கையை நிரப்பினால் மட்டுமே நமிதாவை கூப்பிட முடியும் என கூவி கூவி அழைப்பு விடுத்த பாஜக மாவட்ட தலைவர்- செய்தி வெளியிட கூடாது என செய்தியாளர்களிடம் வாக்குவாதம்

விழுப்புரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் கண்டிப்பாக தாமரை மலரனும் அப்போதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா தெரிவித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது காலி இருக்கைகள் இருந்ததை செய்தியாக வெளியிட கூடாதென பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதால்  பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சொத்துவரி, பால்விலை உயர்வை கண்டித்தும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை என்பதை கண்டித்தும் மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் தொடங்கிய பின்னரும் பாஜக ஆர்ப்பாட்டத்திற்காக போடப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்ததால் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், ’’ஆர்ப்பாட்டத்தில் இருக்கைகள் காலியாக இல்லாமல் நிரப்பினால் மட்டுமே நமீதாவை அழைக்க முடியும். தயவு கூர்ந்து இருக்கைகளை பாஜக தொண்டர்கள் நிரப்புங்கள். காலில் விழுந்து கூறுகிறேன். தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்’’ எனக் கூறியது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்: இருக்கைகளை நிரப்ப கூவிக்கூவி அழைப்பு விடுத்த மாவட்டத் தலைவர்!

 

அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மேடையில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா, திமுக ஆட்சிக்கு வருமுன் அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென கூறி ஏமாற்றி விட்டதாகவும், பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என வழங்கிவிட்டு அதில் பயணிக்கும் கணவர்களுக்கு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி விட்டதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய நமீதா, ’தமிழ்நாட்டில் கண்டிப்பாக தாமரை மலரனும். அப்போதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்’ என தெரிவித்துவிட்டு இறுதியாக ஜெய்ஸ்ரீராம் என கூறி உரையை முடித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பிய பின்னர் செய்தியாளர்களிடம் காலியாக இருக்கைகள் இருந்ததை ஏன் எடுத்தீர்கள்? செய்தி வெளியிட கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளர்களை மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
கிராமத்து பெண்ணை திருமணம் செய்யப்போகும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்
கிராமத்து பெண்ணை திருமணம் செய்யப்போகும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்
Embed widget