vikravandi by election : நமக்கு தான் வாக்களிப்பார்கள் என்று திமுகவினர் அகம்பாவத்தில் உள்ளார்கள் - டி.டி.வி தினகரன்
தமிழகம் முழுவதும் இளைஞர் கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளன, கூலி படை ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது
விழுப்புரம் : திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சனை வந்துவிடும், பாலாற்றில் அனைகட்டுவோம் என்பார்கள், மேகதாதுவில் அனைகட்டுவதை தடுக்க முதல்வர் முன் வரவில்லை என்றும் கூலிபடை ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் எதிர்கட்சிகள் பிளவு பட்டு போய் உள்ளதால் நமக்கு தான் வாக்களிப்பார்கள் என்று அகம்பாவத்தில் உள்ளதாகவும் வீட்டுக்கு ஆயிரம் கொடுத்து விட்டு தாலியை பறிக்கும் சூழல் தான் உள்ளதாக டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து நேமூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய அவர்தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றுகிற முதல்வராக ஸ்டாலின் உள்ளதாகவும் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி வெற்றி பெறுவார்கள் என்பார்கள் ஆனால் ஆர் கே நகரில் நான் வெற்றி பெற்றேன் அது போல இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை வெற்றி பெற செய்யவேண்டும்.
கல்வி கடனை ரத்து செய்வேன் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம் என்றார்கள், அதனை திமுக அரசு ஏன் செய்யவில்லை, திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சனை வந்துவிடும் பாலாற்றில் அனைகட்டுவோம் என்பார்கள் மேகதாதுவில் அனைகட்ட தடுக்க அவர் முன் வரவில்லை கூட்டணி கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறார்கள் ஆனால் அவர்களிடம் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை கேட்டால் கூட்டணி தர்மம் என்பார்கள் என டி டி வி குற்றச்சாட்டினார்.
ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இல்லை மக்கள் ஏமாந்து போய் உள்ளனர். தமிழகம் முழுவதும் இளைஞர் கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். கூலி படை ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் ஜெயின் பறிப்பு செல் போன் திருட்டு தான் நடைபெறுகிறது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார் காவல் துறை செயல்படுகிறதா என்பது தெரியவில்லை காவல் துறையில் உள்ளவர்களும் திமுக ஆட்சியின் மீது வருத்ததில் உள்ளனர்.
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை என்ற ஆட்சி தான் நடைபெறுகிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் அச்சம் ஏற்பட்டு செல்கிறார்கள். இந்த ஆட்சியில் எதிர்கட்சிகள் பிளவு பட்டு போய் உள்ளதால் நமக்கு தான் வாக்களிப்பார்கள் என்று அகம்பாவத்தில் உள்ளதாகவும் வீட்டுக்கு ஆயிரம் கொடுத்து விட்டு தாலியை பறிக்கும் சூழல் தான் உள்ளது. விக்கிரவாண்டியில் ஓட்டு கேக்க கூட வரவில்லை தனது மகனை அனுப்பி விட்டு அமைதியாக வீட்டில் இருக்கிறார். தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை சார்ந்தவர்கள் திமுகவிற்கு எதிராக பாமக அன்புமணிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 1996 மற்றும் 2006 தேர்தலில் ஜெயலலிதாவின் கைகளை வலுபடுத்தியவர் தான் ராமதாஸ் என்றும் பங்காளிசண்டையை விட்டு விட்டு பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.