மேலும் அறிய

கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் எப்படி? - வேல்முருகனின் நியாயமான கேள்விகள் - தவெக அரசின் பதில் என்ன?

இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? - வேல்முருகன் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்

தமிழ்நாட்டில் இருப்பது மின் வெட்டா? மின் திருட்டா? மின்வெட்டுக்கு காரணம் என்ன? கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக திருப்பிவிடப்படுகிறதா? என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும், குறிப்பாக இரவு நேரங்களில், தொடர்ச்சியாக நிகழும் மின்வெட்டுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. கடும் வெப்பத்தால் தகிக்கும் இரவுகளில், குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். முதியவர்கள் மூச்சுத் திணறலோடு இரவைக் கழிக்கின்றனர். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவுகள் இருளில் கரைகின்றன. சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மின்சாரம் என்பது வெறும் வசதி அல்ல. இன்றைய காலகட்டத்தில் அது மனிதர்களின் அன்றாட வாழ்வின் அவசியத் தேவையாக மாறியுள்ளது.

 

வெளிச்சத்தில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை மட்டுமே. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நீண்ட நேர மின்வெட்டுகளுக்கான உண்மையான காரணம் என்ன? உற்பத்தி குறைவா? நிர்வாகத் தோல்வியா? பராமரிப்புப் பணிகளா? அல்லது மக்களுக்குச் செல்ல வேண்டிய மின்சாரம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காகத் திருப்பிவிடப்படுகிறதா? இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை வெறும் அரசியல் விமர்சனமாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இருளில் தவிப்பது ஏழை மக்களின் வீடுகள். ஆனால் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருப்பது பெரும் தொழில் வளாகங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் என்ற காட்சியே மக்களின் மனதில் கேள்விகளை உருவாக்குகிறது.

ஒரு தாய் தனது குழந்தைக்கு விசிறி வீசிக்கொண்டு இரவைக் கடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தேர்வை எதிர்நோக்கும் மாணவன் மெழுகுவர்த்தி ஒளியில் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆனால் இதற்கான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கள்ள மௌனம் காக்கின்றனர். மக்கள் கேட்பது மின்சாரத்தை மட்டும் அல்ல. உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் தான். எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டுகள் தொடர்பான உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும்.

Also Read| தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: இன்று முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்கும் அன்புமணி! பின்னணி என்ன?

மேலும், மாவட்ட வாரியான மின்சார உற்பத்தி, தேவை மற்றும் விநியோகம் குறித்த முழுமையான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின்சார விநியோக விவரங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். முன்அறிவிப்பின்றி நடைபெறும் மின்வெட்டுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதோடு, மின்தடை காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நிரந்தரத் தீர்வுகளை உருவாக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைப் பொறுப்பு என்பதால், இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Embed widget