மேலும் அறிய

தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சி எடுத்தவன் நான்! - திமுக-வை கிழித்தெறிந்த வேல்முருகன்!

பனையூரில் காத்திருந்த விஜய். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றார். லெட்டர் பேடு கட்சி கூட செல்லவில்லை - வேல்முருகன்

விழுப்புரம்: மருத்துவர் ராமதாசும், அன்புமணியும் இணைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்: கதவை திறந்து வைத்து பனையூரில் காத்திருந்த விஜய். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றார். லெட்டர் பேடு கட்சி கூட செல்லவில்லை: விழுப்புரத்தில் வேல்முருகன் பேச்சு.

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய கட்சியின் தலைவர் வேல்முருகன்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் கட்சி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு. 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் இயக்கமாக வளர்ந்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்து நேர்காணல் நடத்தி பட்டியலை தயார் செய்து எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என தயாராக இருந்தேன். அதற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இருந்து வெளியேறுகிறோம் என அறிவித்தேன். எங்களுக்கு சீட்டை விட, தமிழ் சமூகத்திற்காக கோரிக்கை தான் முதன்மையானது.

வேல்முருகன் நம்மோடு இருந்தால் மிகப்பெரிய கொடைச்சலாக இருப்பார் என்று கணக்கு போட்டு. பேச்சுவார்த்தையில் சில இடங்களை கேட்டோம் தர மறுத்தார்கள். கடைசியாக ஏற்கனவே பெற்ற ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ளே வாருங்கள் என்றார்கள். நாங்கள் கொடுப்பது சீட்டு இல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவி என கூறினார்கள. உங்கள் சீட்டும் தேவையில்லை. நோட்டும் தேவையில்லை. கதவு இரண்டையும் திறந்து வைத்து விட்டு பனையூரில் விஜய். கூட்டணியில் இணைந்தால் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றார். ஒருவரும் அங்கு செல்லவில்லை. லெட்டர் பேடு கட்சி கூட செல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகள் என்னை நோக்கி வந்துள்ளன.

சமூக நீதி வழி வந்த அரசு எனக் கூறிக் கொள்ளும் திமுக. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய இட ஒதுக்கீட்டை வழங்குவதை யார் தடுத்தது. உங்களை இயக்குகிற ஆர்எஸ்எஸ். சங்பரிவார் கும்பல்கள் தடுத்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். நீங்கள் மார்த்தட்டி சொல்லும் திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் ஆலோசனை கூறியவன் வேல்முருகன். இன்றைக்கு சில தலைவர்கள் நேராக முதல்வர் இருக்கையில் தான் உட்காருவேன் என சில தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

நான் தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சி எடுத்தவன். பாவம் மருத்துவர் ராமதாசுக்கு இந்த நிலைமை. அதனை நினைத்தால் வேதனையாக உள்ளது. மருத்துவர் அன்புமணியிடம் இருவரும் இணைய வேண்டும் என கூறினேன். இருவருக்கும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் தயவுசெய்து இருவரும் ஒன்றாக இணைந்து ஏழை மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். பலர் இன்றைக்கு பாமகவை விமர்சிக்கிறார்கள். அதனை கேட்கும் போது எங்களுக்கு வேதனையாக உள்ளது என பேசினார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன்:

 

25 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளேன். விரைவில் மூன்றாம் கட்ட பட்டியல் வெளியிடப்படும். 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளுடன் பேசி மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். 

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு கேமரா சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன்.  எங்கள் கூட்டணியில் 40 அரசியல் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 234 தொகுதிகளிலும் கேமரா சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். 50 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி தந்துள்ளோம். 

 

பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு: பண்ருட்டி தொகுதி நிர்வாகிகளோடு கலந்து பேசி இறுதியான முடிவை அறிவிக்க இருக்கிறேன். மருத்துவர் ராமதாசும், அன்புமணியும் இணைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இருவரும் இணை வேண்டிய காலத்தின் கட்டாயம். அப்பா, மகனுக்கான இந்த பிரச்சனையில் பலர் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த கட்சியின் தொண்டர்களின் எதிர்காலம், கட்சி வளர்ச்சிக்கான எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறிக ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் வைக்கப்பட்ட வேண்டுகோள்.  மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவர் இடையேயும் கணிசமான வாக்குகள் உள்ளது. இருவரும் இணைந்தால் வாக்குகள் குறைவதற்கான வாய்ப்பு இல்லை.

பாமக எப்போதும் வளர்ந்துவிடக் கூடாது. சமூக நீதி வளர்ந்து விடக்கூடாது என்பவர்களுக்கெல்லாம் இது சாதகமானது. தமிழ்நாட்டில் கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது. அரசியலில் நாளுக்கு நாள் நிலைமை மாறி வருகிறது. எது வேண்டுமானாலும் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ள தேர்தலாக இது அமையப்போகிறது.

யாராலும் கணிக்க முடியாத தேர்தல் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கணிக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு திமுக, பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ளுமா என்ற கேள்விக்கு: இரண்டு கம்யூனிஸ்டுகள். திருமாவளவன் இருக்கும் வரை அதனை அனுமதிக்க மாட்டார்கள். அப்படி அமைவதற்கு இவர்கள் இடைஞ்சலாக இருப்பதாக திமுக கருதினால் எனக்கு ஏற்பட்ட நிலைமையை அவர்களுக்கு ஏற்படும். அந்நேரத்தில் அந்த கட்சிகள் உரிய முடிவை எடுக்கும். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதத்தின் பெயராலும், இந்து, இந்தியா, இந்தி மொழி என்ற பெயரால், மொழி வழி தேசிய இனங்களையும், ஒற்றுமையாக வாழும் இந்நாட்டில் மக்களை பிளவுபடுத்துகிற பாரதிய ஜனதா என்கிற அரசியல் கட்சி எடுக்கிற அரசியல் நகர்விற்கு தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் தலைமையும் உடன்படக்கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

துப்பில்லாத கட்சிகள்.. ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சர்களை விளாசிய திமுக.. இபிஎஸ் மீதும் சாடல்!
துப்பில்லாத கட்சிகள்.. ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சர்களை விளாசிய திமுக.. இபிஎஸ் மீதும் சாடல்!
குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
குடும்ப அட்டை e-KYC பதிவு ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
Embed widget