Thirumavalavan Thanked Stalin: துயரம் தாளவியலாத கொடுமை.. நீட் தற்கொலை குறித்து பேசிய திருமாவளவன்
நீட் தற்கொலைகளுக்குப் பலியானோரின் குடும்பத்தினருக்கு குறைந்தது இரங்கல்கூட தெரிவிக்க மோடி அரசு முன்வரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நாளை மசோதா தாக்கல் செய்யவுள்ளதற்கு விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சருக்கு நன்றி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ' நீட்' டுக்குப் பலியான மாணவன் மேட்டூர் தனுஷின் தந்தை சிவக்குமார் அவர்களைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினேன். கட்சியின் முன்னணி தோழர்கள் சாமுராய்குரு, சிவா, சிவக்குமார், அப்துல் கபூர் மற்றும் அருள் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நீட் தேர்வு அச்சத்தால் தம்பி தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட துயரம் தாளவியலாத கொடுமை. ஏற்கனவே இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிட்டவில்லை. இம்முறையும் இடம் கிடைக்காமற்போனால் என்ன செய்வதென்று அஞ்சிக் கூடுதல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி பலியாகியிருக்கிறான். இதற்கு மோடி அரசே பொறுப்பு. இத்தகைய தற்கொலைகளுக்குப் பலியானோரின் குடும்பத்தினருக்குக் குறைந்தது இரங்கல்கூட தெரிவிக்க மோடி அரசு முன்வரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு மசோதாவைத் தாக்கல் செய்யவுள்ளது எனும் முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது. முதல்வருக்கு எமது நன்றி. தனுஷ் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள், நீட்தேர்வுக்காகத் தற்கொலை செய்யும் போக்கை முற்றாகக் கைவிட வலியுறுத்துகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தம்பி தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட துயரம் தாளவியலாத கொடுமை. ஏற்கனவே இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிட்டவில்லை. இம்முறையும் இடம் கிடைக்காமற்போனால் என்ன செய்வதென்று அஞ்சிக் கூடுதல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி பலியாகியிருக்கிறான். pic.twitter.com/497KEzU10z
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 12, 2021
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு பெற்றது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு நடைபெற்ற தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதினர். முதன்முறையாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
நீட் எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்!
— M.K.Stalin (@mkstalin) September 12, 2021
கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்!
நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம்; #NEET-ஐ இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கொண்டு செல்வோம். pic.twitter.com/iAI4zm9knA