மேலும் அறிய

Thirumavalavan: விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. திருமாவளவனை சாடிய ஆ.ராசா!

விஜய் அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 33 அமைச்சர்கள் உள்ளனர். மீதமுள்ள தலா ஒவ்வொரு இடத்திலும் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த இருவர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். 

கூட்டணி ஆட்சிக்கு வித்திட்ட விஜய்

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே தன்னுடைய அரசியல் கட்சியின் தொடக்கத்திலேயே ஆட்சியில் பங்கு என்பதை விஜய் அறிவித்தார். ஆனால் அதெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என மற்ற கட்சிகள் கண்டும் காணாமல் இருந்தது. ஆனால் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்த முதலமைச்சர் விஜய் அதனை நிறைவேற்றியும் காட்டியுள்ளார். 

3 கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்

இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்களில் வென்றாக வேண்டும் என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 107 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கேட்டார். இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்றுக்கொண்டது. அதன்படி அக்கட்சிக்கு அமைச்சரவையில் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டது. ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் சுற்றுலாத்துறை, உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர். 

தற்போது விஜய் அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 33 அமைச்சர்கள் உள்ளனர். அதிகப்பட்சம் 35 பேர் இருக்கலாம் என்ற நிலையில் மீதமுள்ள தலா ஒவ்வொரு இடத்திலும் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இந்த நிகழ்வு மாபெரும் வரலாற்று புரட்சியாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறாத கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த முதலமைச்சர் விஜயை பலரும் பாராட்டி வருகின்றனர். 

திருமாவளவன் மீது கடும் விமர்சனம்

இந்த நிலையில் திருமாவளவன் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அமைச்சரவையில் இடம்பெறுவது மூலம் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை வெளியேறியுள்ளது. இதனால் விசிக தலைவர் திருமாவளவனை திமுகவினர் கடுமையாக சாடி வருகின்றனர். 

அதன்படி திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்டுள்ள பதிவில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம்  தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ;  என்றாலும்  களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!” என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
அதிகாரம் கையில் இருக்கும் ஆணவமா? - தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!
அதிகாரம் கையில் இருக்கும் ஆணவமா? - தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget