மேலும் அறிய

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு காங்கிரஸ், தி.மு.க. கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - வானதி சீனிவாசன் கேள்வி

பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு காங்கிரஸ், தி.மு.க. கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள அறிக்கையில், ”அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய, இஸ்லாமிய அடிப்படைவாத நாடான பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியை, 'கசாப்பு கடைக்காரர்' என தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். அதுமட்டுல்லாது, 'பிரதமர் மோடியும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்' என்று அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

அநாகீரகம்:

ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பவர், அந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதி. ஐ.நா. போன்ற உலக அரங்குகளில், ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும், அந்நாட்டின் கருத்தாகவே ஏற்றுக்கொள்ளப்படும். வெளியுறவுத் துறை அமைச்சரின் வார்த்தை சற்று தடித்தால்கூட, அது அவரது நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும். தீராப் பழியை கொண்டு வந்துவிடும்.
அதனால், எந்தவொரு நாட்டிலும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர்கள் மிகவும் கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவார்கள்.

ஆனால், பிலாவல் பூட்டோ சர்தாரி, தான் பொறுப்பான வெளியுறவு அமைச்சர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்து, பேட்டை ரவுடி போல, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பேசியிருக்கிறார். அவரது அநாகரிகமான அத்துமீறலுக்கு, அங்கேயே நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்திருக்கிகிறார்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்:

ஒரே நாடாக இருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் இந்தியா, பாகிஸ்தான் என பிரித்தனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நாற்றாங்காலாக உள்ளது. உலகெங்கும் பல்வேறு தருணங்களில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களுக்கான வேர்கள் பாகிஸ்தானில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் இரட்டை கோபுர குண்டு வெடிப்புக்கு காரணமான, பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த, இப்போதும் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான். பயங்கரவாதிகளுக்கு தங்கள் நாட்டில் பயிற்சி அளித்து, இந்தியாவுக்குள் அனுப்பி, அமைதியை சீர்குலைத்து வரும் நாடு பாகிஸ்தான். இந்திய நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை போற்றி வளர்த்து வரும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், 140 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடியை தரம் தாழ்ந்த விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது. பிலாவல் பூட்டோ சர்தாரி, தனிப்பட்ட மோடியை எதிர்க்கவில்லை. இந்தியாவை உலகின் வல்லரசாக உயர்த்தி கொண்டிருக்கும் பிரதமர் என்பதால் தான், விமர்சித்திருக்கிறார். அதாவது இந்தியாவை, 140 கோடி மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.

கண்டனம் தெரிவித்தாதது ஏன்..?

எனவே, பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக அமைதி காப்பது நாட்டின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, இனியாவது பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தக்க நேரத்தில், இந்திய மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

2007 குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது அன்று அம்மாநில முதல்வராக இருந்த மோடியை, மரண வியாபாரி என, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா விமர்சித்தார். அதற்கு குஜராத் மக்கள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறந்து விட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget