மேலும் அறிய

”முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மீண்டு வருவேன்”.. வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியீடு!

இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

மதிமுக நிறுவனர் வைகோவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று வலது தோள்பட்டையில் சிறிய அறிவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

வைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி என வைகோவின் மகனும், மதிமுக பொது செயலாளருமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தனது தந்தை நலமுடன் இருப்பதாக வைகோ பேசுவது போன்ற வீடியோவையும் துரை வைகோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மறுமலர்ச்சி சொந்தங்களே வணக்கம். இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் தனது உடல்நிலை குறித்து தமிழ் பெருமக்களுக்கு விளக்கியும், அவர் நலனை விழையும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டியும் காணொளியில் நேற்று இரவு பேசி வெளியிட்டுள்ளார்கள்.” என பதிவிட்டுள்ளார். 

அதில், ”நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்” என இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் பேசிய வைகோ, அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே! தமிழ்நாட்டில் பொது ஊழியம் செய்கின்ற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ, ஏறத்தாழ 7000 கிலோ மீட்டர் நடந்து இருக்கிறேன். ஆனால், நான் கீழே விழுந்தது இல்லை. இப்போது நான்கு நாட்களுக்கு முன்னர், நெல்லைக்கு சென்றிருந்த இடத்தில் என் வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல், பக்கத்தில் இருந்த திண்ணை வழியாக ஏறினேன். அப்போது என்னையும் அறியாது இடது புறம் சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அடிபட்டிருந்தாலோ, முதுகில் அடிபட்டிருந்தாலோ இயங்க முடியாமல் போயிருப்பேன். நல்லவேளையாக இடது தோள்பட்டையில் உள்ள கிண்ணம் (மூட்டு) உடைந்திருக்கிறது. அதோடு எலும்பும் கீறி இருக்கிறது. இதையடுத்து, மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சென்னைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்யவுள்ளேன். 

ஆகவே, நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்புபோல், இயங்க முடியுமா என்பதில் யாரும் சந்தேகிக்க வேண்டும். நான் உழைப்புக்கு பெயர்போனவன் என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டியதை செய்ய, பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget