Ukraine students: உக்ரைன் மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
உக்ரைன் மாணவர்களுக்கு, இந்தியாவில் கல்வி பயிலுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் போர் சூழல் காரணமாக இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு கல்வி பயிலுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
”இந்தியாவில் கல்வியைத் தொடர முடியாது”
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறும்போது, வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வழிமுறைக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்குத் தளர்வு செய்து கொடுத்தால், அது இந்தியாவின் மருத்துப் படிப்புடைய தரத்தை பாதிக்கும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மேலும் பேசிய மத்திய அரசு, ''தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் இடமில்லாததால், அவர்களை இந்தியப் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஸ்டாலின் கடிதம்:
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
உக்ரைனில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாமல் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்
வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டுமென்றும் என்று குறிப்பிட்டுள்ளார்
உக்ரைனில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாமல் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும், வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும்
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 16, 2022
1/2 pic.twitter.com/nUcZoKocHJ
View this post on Instagram