TVK Vijay: விஜய் இப்படி மாஸ் காட்டிட்டாரு.. படையே நடுங்க கதறும் மக்கள்.. வெளியான ஒரிஜினல் வீடியோ
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் நேற்று தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய மாநாட்டிற்காக நேற்று முன்தினம் இரவே இளைஞர்கள் வர தொடங்கிவிட்டனர். விஜய்யை காண்பதற்காகவே கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என பலரும் குவிந்திருந்தனர். அதில், கேரள பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தவெக மாநாட்டிற்கு வந்தார். அப்போது, நான் தீவிரமான விஜய் ரசிகை, எனக்கு தமிழ்நாட்டில் ஓட்டு கிடையாது என்பது வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய்யின் ரசிகர்கள் ஏக்கம்
அதேபோன்று கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் தவெக மாநாட்டில் கலந்துகொண்டார். எனக்கு விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் படங்களை விரும்பி பார்ப்பேன். தவெக மாநாட்டிற்காக பைக்கிலேயே பெங்களூரில் இருந்து மதுரை வந்தேன். அவரை பார்த்தது மகிழ்ச்சி. எனக்கு இங்கு வாக்கு இல்லை என்பது வருத்தம். நிச்சயம் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோன்று இந்த மாநாட்டில் விஜய்யின் அரசியல் பேச்சு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
செல்ஃபி வீடியோ வைரல்
மாநாடு முடிந்த கையோடு தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர். இதனால் மதுரை மாநகரமே ஸ்தம்பித்து போனது. எலியார்பத்தி சாலையில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்ற காட்சிகளும் வெளியானது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டில் தொண்டர்கள் நடுவே ராம்ப் வாக் சென்றார். அப்போது தொண்டர்கள் சிலர் தாவிக் குதித்து தடுப்பு வேலியை தாண்டியும் ராம்ப் வாக்கில் வந்த விஜய்க்கு இன்ப அதிர்ச்சி காெடுத்தனர். பின்னர் கட்சி கொடியை விஜய் தலையில் கட்டிக்கொண்டும் உற்சாகமாக நடந்து சென்றார். இதனிடையே, ராம்ப் வாக்கில் நடந்து சென்ற போது விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில், தொண்டர்கள் தவெக தவெக என கத்திக்கொண்டு இருக்க மாநாடே அதிர்ந்தது.
Much awaited selfie video 😍😍😍#TVKVijay
— Vijay Fans Trends (@VijayFansTrends) August 22, 2025
pic.twitter.com/IiYdSxtUug





















