மேலும் அறிய

TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!

நீட் தேர்வை மிகக் கடுமையாக விமர்சித்து பேசிய நடிகர் விஜய், தி.மு.க. வழியில் மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசினார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழக கட்சியைத் தொடங்கிய பிறகு, அரசியல் தொடர்பாக பெரியளவில் எந்தவொரு கருத்தையும் அவர் பேசவில்லை. இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விருது வழங்கும் விழாவில், போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து நடிகர் விஜய் பேசினார்.

ஒன்றிய அரசு என்று குறிப்பிட்ட விஜய்:

இந்த சூழலில், இன்று சென்னையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அவரது பேச்சில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு, நீட் தேர்வு நம்பகத்தன்மை குறித்து பேசினார்.

மேலும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நடிகர் விஜய் இன்றைய பேச்சின்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசினார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுவாக மத்தியில் ஆளுங்கட்சியை மத்திய அரசு என்று குறிப்பிட்டே வந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சியில் அமைந்தது முதல் மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

தி.மு.க. பாணியில் விஜய்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதற்கு தி.மு.க. தலைவர்களும், நிர்வாகிகளும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யும் இன்று மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே. மெர்சல்  உள்ளிட்ட அவரது படங்களில் இடம்பெற்ற சில வசனங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர். அப்போது முதலே நடிகர் விஜய்க்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில், நடிகர் விஜய் இன்று மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த நீட் தேர்வை கடுமையாக விமர்சித்ததுடன், நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்றும் பேசியுள்ளார். நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்த விஜய், நீட் தேர்வு நடத்தப்படும் விதத்தையும் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடுகளை மிக கடுமையாக விமர்சித்துள்ள விஜய், தி.மு.க. பாணியில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டும் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்

மேலும் படிக்க: Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
Embed widget