காரில் சென்ற தவெகவினர்! சாதியை கேட்ட கரூர் போலீஸ்.. நடந்தது என்ன?
காவல்துறையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சாதி பெயரை கேட்டது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மாநாட்டிற்கு வந்த தொண்டர்களிடம் காவல் துறையினர் பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாக தவெகவினர் குற்றம்சாட்டினர்

கரூரில் இருந்து தவெக மாநாட்டிற்கு சென்ற நிர்வாகிகளிடம் நீங்கள் எந்த ஜாதி என்று அரவக்குறிச்சி குற்றப்புலனாய்வு துறை போலீசார் கேட்டும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மதுரை தவெக மாநாடு:
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விஜய் ஆளும் திமுக அரசையும் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்
ஜாதியை கேட்ட போலீசார்:
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இருந்து கார் மூலம் சென்ற தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் காரை அரவக்குறிச்சி குற்றப்புலனாய்வு துறை போலீஸ் ஜெரால்ட் என்பவர் நிறுத்தி எத்தனை பேர் செல்கின்றீர்கள் கட்சியில் உங்கள் பொறுப்பு மற்றும் கார் நம்பர் கேட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் வாகனங்களில் பயணம் செய்த நபர்களின் ஜாதி பெயரை கேட்டுள்ளார். அதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
காவல்துறையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சாதி பெயரை கேட்டது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மாநாட்டிற்கு வந்த தவெக தொண்டர்களிடம் காவல் துறையினர் பல்வேறு கெடுபிடிகளை விதித்ததாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இதன் பின்னால் எதேனும் அரசியல் காரணங்கள் உள்ளதா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
குறிப்பாக காவல்துறையைச் சார்ந்த நபரே இது போன்ற ஜாதி பெயர் கேட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு கேட்கப்பட்டதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.






















