மேலும் அறிய
Top 10 News Headlines: சீமான் மீது பாய்ந்த வழக்கு, நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஏஐ-மோடி விலியுறுத்தல் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Nov. 24th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாட்டில் SIR பணிகளை நேரில் ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகை. குளறுபடி நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இன்று முதல் கள ஆய்வு செய்ய திட்டம்.
- ரூ.11.81 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 51 புதிய பேருந்துகளின் சேவையையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
- புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசி மிரட்டியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுவகளின் கீழ் வழக்குப்பதிவு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது. கிராமிற்கு 110 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 11,520 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,160 ரூபாய்க்கும் விற்பனை. வெள்ளி விலையும் கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 171 ரூபாய்க்கு விற்பனை.
- தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
- குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை வங்கக் கடல் பகுதியில் நாளை(நவ.25) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
- உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- இந்தியாவில் உள்ள அனைவரும் செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை அடையும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தகவல். ஏஐ தொழில்நுட்பம் உலகளாவிய பலன்களை கொடுக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும் என ஜி20 மாநாட்டில் வலியுறுத்தல்.
- இந்தியாவும் கனடாவும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற G20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னேவுக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இந்த முன்னேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க வரைவுத் திட்டத்தின் சமீபத்திய பதிப்பில், கெய்வின் பெரும்பாலான "முக்கிய முன்னுரிமைகள்" சேர்க்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் உக்ரைன் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















