மேலும் அறிய

TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?

தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிப்பது என்பதில் விஜய்க்கு சிரமம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த மதிமுக, விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது வெளியேறிவிட்டன. 

தவெக கூட்டணி:

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற கட்சியினர் தற்போது தவெக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சூழலில், தவெக தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் விஜய், வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன் ஆகிய கூட்டணி கட்சித் தலைவர்களும், அந்தந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

ஒருங்கிணைப்பாளர் யார்?

புதியதாக அமைந்துள்ள இந்த கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கலாம்? கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்றும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கான சமூகநீதி கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எந்த பெயரும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

அதேசமயம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம்? என்பதிலும் ஒருமித்த கருத்து எழவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணி கட்சித் தலைவர்களிலே மூத்தவரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவை நியமிக்க வேண்டும் என்று மதிமுக-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

விஜய் முடிவு என்ன?

ஆனால், சமூகநீதிக்கான கூட்டணி என்பதை வெளிப்படுத்தும் விதமாக விசிக தலைவர் திருமாவளவனை நியமிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் அரசியல் அனுபவம் நிறைந்தவர்கள் என்பதால் யாரை தேர்வு செய்யலாம்? என்பதிலும் விஜய்க்கு சவால் எழுந்துள்ளது.

இந்த சூழலில், விரைவில் இந்த கூட்டணியின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் தவெக தலைமையிலான இந்த புதிய கூட்டணியின் பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்தி தேர்தலைச் சந்திக்க தவெக வியூகம் வகுத்து வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget