TVK : விஜய் வருகையை வரவேற்ற பேனரில் சர்ச்சை! ஆதவ் அர்ஜூனா புகைப்படம் மறைப்பு-குன்னத்தில் பரபரப்பு!
குன்னம் பேருந்து நிலையத்தில் வைத்திருந்த பேனரை இறக்கி பேனரில் இருந்த ஆதவ் அர்ஜூனாவின் புகைப்படத்தின் மீது வெள்ளை பேனர் கொண்டு ஒட்டி அதன் பின் மீண்டும் பேனரை பேருந்து நிலையத்தில் வைத்தனர்.

குன்னம் பகுதியில் தவெக தலைவர் விஜய்யை வரவேற்று வைக்கப்பட்ட பேனரில் ஆதவ் அர்ஜூனா புகைப்படம் புகைப்படத்தின் மீது போஸ்டர் ஒட்டி மறைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் அரசியல் பிரச்சாரம்:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது மாநிலம் தழுவிய மாவட்ட வாரியான மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். திருச்சியில் இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணமானது, ஒவ்வொரு சனிக்கிழமையும் திட்டமிடப்பட்டு டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட லோகோவில், ”உங்க விஜய் நான் வரேன், வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தவெக பேனர்கள்
இன்று தவெக தலைவர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், குன்னம் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் அவரை வரவேற்று தவெக மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் குன்னம் பேருந்து நிலையத்தில் பேனர்கள் வைத்தனர்.
ஆதவ் அர்ஜூனா புகைப்படம் நீக்கம்
பேனரில் தவெக கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பேனரில் இடம்பெற்றிருந்த ஆதவ் அர்ஜீனாவை புகைப்படத்தை தவெக மாவட்ட செயலாளர் புகைப்படத்தை நீக்க வேண்டுமென கூறியதால் தவெக நிர்வாகிகள் குன்னம் பேருந்து நிலையத்தில் வைத்திருந்த பேனரை இறக்கி பேனரில் இருந்த ஆதவ் அர்ஜூனாவின் புகைப்படத்தின் மீது வெள்ளை பேனர் கொண்டு ஒட்டி அதன் பின் மீண்டும் பேனரை பேருந்து நிலையத்தில் வைத்தனர்.
பேனர் வைத்தபோது புஸ்சி ஆனந்த் புகைப்படம் இடம் பெற்றிருந்த பேனர் பகுதியில் கம்பி குத்தி கிழிந்ததால் உடனடியாக பேனரை அகற்றினர். பேனரில் இருந்த ஆதவ் அர்ஜூனாவின் புகைப்படத்தினை நீக்கிய சம்பவம் கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






















