மேலும் அறிய

தொகுதி மறுவரையறை தீர்மானம்: 'தமிழகப் பிரச்சினைகளை திசைதிருப்பும் நாடகம்' - டிடிவி தினகரன் சாடல்!

அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது - தினகரன்

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய்  சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.

மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, விவசாயிகள் பெற்ற முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம்  மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.

 

தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி  தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்னைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறை தீர்மானம்: 'தமிழகப் பிரச்சினைகளை திசைதிருப்பும் நாடகம்' - டிடிவி தினகரன் சாடல்!
தொகுதி மறுவரையறை தீர்மானம்: 'தமிழகப் பிரச்சினைகளை திசைதிருப்பும் நாடகம்' - டிடிவி தினகரன் சாடல்!
பண்டிகை உணவிலும் இப்படியா? பொங்கல் முதல் எள்ளுருண்டை வரை… முன்னோர் வகுத்த உணவு ரகசியம்!
பண்டிகை உணவிலும் இப்படியா? பொங்கல் முதல் எள்ளுருண்டை வரை… முன்னோர் வகுத்த உணவு ரகசியம்!
Chennai Corporation: சென்னையில் சொத்து வரி 4 மடங்கு உயர்வா? - மாநகராட்சி அளித்த பரபரப்பு விளக்கம்!
Chennai Corporation: சென்னையில் சொத்து வரி 4 மடங்கு உயர்வா? - மாநகராட்சி அளித்த பரபரப்பு விளக்கம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget