மேலும் அறிய

திருப்பதி செல்ல நினைப்பவர்கள் கவனத்திற்கு... தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருப்பதி செல்ல நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் உள்ளிட்ட அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரங்கள் ஆவதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

சாதாரண மக்கள் ஏழுமலையானை தரிசிக்க வசதியாக இம்மாதம் கடைசி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாவதால் ஒருவருக்கு 2 லட்டுகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனம், நடைபாதை வழியாக வரும் பக்தர்கள் என திருப்பதியே ஸ்தம்பித்து போயுள்ளது. 

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் திருப்பதி செல்ல நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து திருமலை செல்ல விரும்பும் பக்தர்களுக்காக ஒருநாள் திருப்பதி சுற்றுலாவை தினசரி சென்னையிலிருந்து இயக்கி வருகிறது. இதற்கு முன்னால் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் திருப்பதிக்கு வருகை தரும் வெளிமாநில பக்தர்களின் விவரங்களை 7 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

இதனைக் கருத்தில் கொண்டு 2 நாட்கள் என்ற நடைமுறையை 7 நாட்களாக மாற்றியுள்ளதால் திருப்பதி சுற்றுலாவை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் 7 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், மேலும் விவரங்களுக்கு 044 -2533 3333, 044 -2533 3444, 1800- 42531111 ஆகிய எண்களை கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget