மேலும் அறிய

Minister Rajakannappan: ராஜகண்ணப்பனுக்கு சிக்கலான எழிலக ரெய்டு! முதுகுளத்தூர் சிக்கல்! இலாகா மாற்ற பின்னணி் இதுவா?

திடீர் இலாகா மாற்றத்துக்கு காரணமாக சொல்லப்படுவது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய விவகாரம்தான்.

ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி அமைந்த பிறகு முதல் அமைச்சரவை மாற்றமாக அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் இலாகா மாற்றத்துக்கு காரணமாக சொல்லப்படுவது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய விவகாரம்தான்.

பின்னணி என்ன? 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக  பணிபுரிபவர் ராஜேந்திரன். இவரை  நேற்று 27.3.22 காலை போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிவகங்கை வீட்டிற்கு வர சொல்லியதாக கூறப்படுகிறது. அதனை கேட்டு அவரும், ஊராட்சி ஒன்றிய (கிராம ஊராட்சி) ஆணையாளர் அன்புகண்ணன் ஆகியோர் சென்றுள்ளனர்.

Minister Rajakannappan: ராஜகண்ணப்பனுக்கு சிக்கலான எழிலக ரெய்டு! முதுகுளத்தூர் சிக்கல்! இலாகா மாற்ற பின்னணி் இதுவா?

வீட்டின் உள்ளே நுழைந்த உடன்  போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராஜேந்திரனை நீ SC BDO  தானே என்று கூறி நீ சேர்மன் (அதிமுக) பேச்சை கொண்டு தான் நடப்பாய், நாங்கள் சொல்வதை கேட்பது இல்லை என்று கூறி SC BDO என்று 6 தடவைக்கு மேல் SC BDO என்று கூறியுள்ளார். உடனே உன்னை தூக்கி அடிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளதாக தெரிகிறது.  உன்னை AD கிட்ட சொல்லி உடனே தூக்கி அடிக்கிறேன் என்று ஒருமையில் பேசி உள்ளதாக கூறினார். இதனையடுத்து மீண்டும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அவரை சந்திக்காமல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மனம் நொந்து போன ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் வீட்டில் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் ஊடகங்களிலும் சோஷியல் மீடியாக்களிலும் வேகமாக பரவியது. பல்வேறு கட்சியினரும் கண்டனத்தை பதிவிட்டனர்.  இது குறித்து அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம்,

ஒரு பக்கம் சமூக நீதி காக்க முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாக பேசுகிறார். ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து, இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டது.  ஆனால் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றத்துக்கு இதுமட்டுமே காரணம் இல்லை எனக் கூறப்படுகிறது.

நடராஜன்..

போக்குவரத்து துறையின் துணை ஆணையரான நடராஜனின் எழிலகம் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி  அதிரடி ரெய்டு நடந்தது. அதில் 30 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம், டைரி உள்ளிட்டவை சிக்கியது. துணை ஆணையர் நடராஜன் மற்றும் பணம் சரிபார்க்கும் அவரது உதவியாளர் மீது இந்த ரெய்டின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ரெய்டுக்கு பிறகு அதிகம் அடிபட்டவர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் தான். அவரும்  துணை ஆணையரான நடராஜனும் மிகவும் நெருக்கமானவர்கள் எனக் கூறப்பட்டதே அடுத்த புகைச்சலுக்கு காரணமாக கூறப்பட்டது. லஞ்சத்தில் திளைக்கும் நடராஜன் எந்த சிக்கல் வந்தாலும் அமைச்சரின் பெயரைக்  கூறுவதும் துறை ரீதியிலான பணியை சரியாக செய்யாமல் அமைச்சர் பெயரைக் குறிப்பிட்டே நாட்களை நடத்தியதாகவும் எழிலகத்தில் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் நடராஜன் மீதான ரெய்டும் அதனைத் தொடர்ந்து அடிபடும் ராஜகண்ணப்பனின் பெயரும் திமுக தலைமைக்கு சென்றதாக அப்போதே கூறப்பட்டது. இது அடுத்தக்கட்டத்துக்கு சென்றால் அமைச்சரவையில் மாற்றம் கூட வரலாம் என கிசுகிசுக்கப்பட்டது . இது ஒருபுறம் புகைச்சலில் இருக்கும் நேரத்தில்தான் ஒருமையில் திட்டிய விவகாரத்தில் மீண்டும் சிக்கினார் ராஜகண்ணப்பன். தொடர் சர்ச்சையில் சிக்கியதால் திமுக தலைமை இந்த இலாகா மாற்றத்தை கையில் எடுத்து எச்சரிக்கை கொடுத்துள்ளதாக கிசுகிசுக்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Embed widget