மேலும் அறிய

30,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தமிழக அரசு ஆதரவு தேவை: பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கம்

ஆத்மநிர்பர் பாரத்' செயல்படத் தொடங்கியதை அடுத்து சீன பொம்மைகள் இறக்குமதி குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்

தமிழ்நாட்டின் பொம்மை உற்பத்தித் தொழிற்சாலையானது  மாநில அரசிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற்றால் கிட்டத்தட்ட 30,000 வேலைகளை எளிதாக உருவாக்க முடியும், இது இந்தத் துறைக்கு உந்துதலை வழங்கும் என்று  தமிழ்நாடு பொம்மை வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். 

மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொம்மை உற்பத்தியாளர்கள் இருப்பதால், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக இணைப்புடன் தொழில்துறைக்கு சிறந்த இடமாக இருக்கும் என்று மேலும் அவர் தெரிவித்தார். 

புதுடெல்லியில் தேசிய அளவிலான பொம்மை கண்காட்சி நடைபெற்றபோது, உற்பத்திகாகத் ​​தெலங்கானா அரசு 1,000 ஏக்கர் நிலத்தை தொழிலுக்காக ஒதுக்கியது. "இது மிகப் பெரிய மற்றும் பாசிட்டிவ்வான நடவடிக்கையாகும், நிறைய தொழில்துறையினர் இதனால் முன்கூட்டியே சென்று தங்கள் இடங்களை ஹைதராபாத்தில் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டிலும் இதே போன்ற வகையிலான ஆதரவு தேவை." என்கிறார். அவரைப் பொறுத்தவரை, தென்னகத்தில் உள்ள பொம்மை சந்தைக்கான தலைநகரமாக சென்னை உள்ளது என்கிறார். இங்கு அதற்கான அதிக முதலீட்டாளர்கள் இருப்பதும் ஒரு காரணம்.

30,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தமிழக அரசு ஆதரவு தேவை: பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கம்

"அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர், ஏனென்றால் நம்மிடம் துறைமுக இணைப்பு உள்ளது. இது பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு எளிதானது," என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மட்டும் பொம்மைத் தொழிலின் மதிப்பு ரூபாய் 600 கோடி என்றும், உற்பத்தி மற்றும் கிடங்கு இரண்டிற்கும் அரசு மானிய விலையில் நிலம் வழங்கினால் அது மேலும் வளர்ச்சி அடையும் என்றும் சந்தோஷ்குமார் மேலும் குறிப்பிட்டார்.

"சென்னை துறைமுகம் இருப்பதன் காரணத்தால் மிகவும் வலுவான சந்தையாக உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மற்ற எல்லா அரசாங்கங்களும் வழங்கும் ஆதரவு தமிழ்நாட்டில் உள்ள பொம்மை உற்பத்தி தொழிலாளர்களுக்கு இல்லை," என்று சோகத்துடன் பகிர்கிறார்.

தேசிய அளவிலான தொழில் வளர்ச்சி குறித்துப் பேசுகையில்,"புது டெல்லி, மும்பை, சென்னை போன்ற இடங்களில் தரமற்ற பொம்மைகளை விற்கும் கிரே மார்க்கெட் செழித்து வளர்ந்தது. ஏனெனில் பொம்மை தயாரிப்புக்கான ஒழுங்குமுறை இல்லாததால் தயாரிப்பு முறை குறித்த எந்த விவரக்குறிப்புகளும் இல்லாதது மற்றும் தரம் இல்லாமல் பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்தல் போன்ற காரணத்தால் இந்த  கள்ளச் சந்தை வளர்ந்தது” என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' செயல்படத் தொடங்கியதை அடுத்து சீன பொம்மைகள் இறக்குமதி குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்பு 90 சதவிகிதமாக இருந்த இறக்குமதி தற்போது 5 சதவிகிதம் குறைந்துள்ளது என்றார் அவர்.

இதே கருத்தை எதிரொலிக்கும் இந்திய பொம்மை சங்கத்தின் தலைவர் அஜய் அகர்வால், இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கான சுங்க வரியை அதிகரிப்பது மற்றும் பொம்மைகளுக்கு பிஐஎஸ் சான்றிதழை கட்டாயமாக்குவது போன்ற அரசின் கொள்கை உள்நாட்டு பொம்மை உற்பத்தி துறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்திய பொம்மை சந்தை 12 சதவீதத்திற்கு மேல் வளர்ந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிட்டத்தட்ட 80 சதவீத பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று, இறக்குமதி வியத்தகு அளவில் குறைந்துவிட்டதால், சூழ்நிலை மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு, ஆந்திரா, புது தில்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முக்கிய பொம்மைச் சந்தையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget