மேலும் அறிய
‛என்னது 5 லட்சம் பேர் வந்தாங்களா...’ 40 நாட்களில் குலுங்கிய கன்னியாகுமரி!
Kanyakumari : இதில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட்டு வந்து உள்ளனர்
![‛என்னது 5 லட்சம் பேர் வந்தாங்களா...’ 40 நாட்களில் குலுங்கிய கன்னியாகுமரி! Tourists flock to Kanyakumari, 5 lakh visitors in 40 days ‛என்னது 5 லட்சம் பேர் வந்தாங்களா...’ 40 நாட்களில் குலுங்கிய கன்னியாகுமரி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/03df675968f38872aa18816221999097_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள்
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதே போல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.
![‛என்னது 5 லட்சம் பேர் வந்தாங்களா...’ 40 நாட்களில் குலுங்கிய கன்னியாகுமரி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/3fb3069be1d2d4ff23203bb6ba6b022a_original.jpg)
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவந்தனர்
கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர்மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.
![‛என்னது 5 லட்சம் பேர் வந்தாங்களா...’ 40 நாட்களில் குலுங்கிய கன்னியாகுமரி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/59d00032d9f7e4ba0b0646c185d9e4cd_original.jpg)
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கோடை விடுமுறை சீசன்களை கட்டியது.
இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற் கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கோடை விடுமுறை சீசனை யொட்டி கடந்த 40 நாட்களில் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளனர்.
இதில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
![‛என்னது 5 லட்சம் பேர் வந்தாங்களா...’ 40 நாட்களில் குலுங்கிய கன்னியாகுமரி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/79a8cf8ecea80ac61247ab96f5a7a816_original.jpg)
குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை கண்டுகளிக்க ஏதுவாக கூடுதல் படகு தளம் அமைத்து படகுகள் இயக்கப்பட வேண்டும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கடல்வழி பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion