மேலும் அறிய

Free travel in metro train : நாளை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க சூப்பர் சான்ஸ்.! யாரெல்லாம் தெரியுமா.? வெளியான அறிவிப்பு

Free travel in metro train : சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பல மணி நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அதிக கட்டணம் காரணமாக பொதுமக்கள் பெரிய அளவில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தாத நிலை உருவானது. இதனையடுத்து சிறிய அளவு மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டதையடுத்து மெட்ரோ ரயிலிலில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சேர வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகிறது.

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சி, கிரிக்கெட் போட்டி ஆகிய நேரத்தில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுவது மட்டுமில்லாமல், தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இலவசமாக ரயிலில் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து "IPL 2026" லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான IPL 2026 லீக் போட்டி (ஏப்ரல் 26, 2026) நாளை நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டி- நாளை இலவச பயணம்

இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். நுழைவுச்சீட்டில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான OR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்தவொரு மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  போட்டி நடைபெறும் நாளன்று. மெட்ரோ இரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி (Sunday timetable) இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
TASMAC bars : தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget