தக்காளி தட்டுப்பாட்டுக்கு அரசு புது ஐடியா... பண்ணை பசுமைக் கடைகளில் விற்பதாக அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் பரவலான மழை காரணமாகவும், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கடுமையாக ஏறியுள்ளது.
தக்காளி விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மழைக்காலத்தை முன்னிட்டு வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்வது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை, கோயம்புத்தூர். தூத்துக்குடி. மதுரை, திருவண்ணாமலை. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர். திருநெல்வேலி திருப்பூர், சேலம், ஈரோடு. வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ. 110 முதல் ரூ130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி கொள்முதல் செய்யவும். இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#BREAKING | பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்கப்படும் - கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி https://t.co/bYS4qhK8XM | #Tomato | #TNGovt | #TamilNadu pic.twitter.com/KCGwAHLwKm
— ABP Nadu (@abpnadu) November 23, 2021
தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆந்திராவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்ப்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி கடந்த இரண்டு நாட்களாக 100 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் பரவலான மழை காரணமாகவும், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கடுமையாக ஏறியுள்ளது.
தக்காள் விலையை தொடர்ந்து, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பச்சை பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்