மேலும் அறிய
7 AM Headlines: நேற்றைய நாளில் என்னென்ன நடந்தது..? டக்கென்று அறிய.. ஏபிபி பக்கம் வாங்க..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- இளைஞர்கள், மாணவர்களிடையே ஜாதி மோதல்களை தூண்டும் வாட்ஸ் அப் குழுக்கள் மீது சட்ட நடவடிக்கை : காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்
- வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: அரசு, மாவட்ட நிர்வாகம் செயல்பாடு திருப்தியளிக்கிறது - திருப்பூரில் ஆய்வுக்கு பின் பீகார் குழு பாராட்டு
- சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி : மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டம்
- அரசை தேடி மக்கள் சென்ற காலம் மாறி மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உங்களை தேடி வருகிறது- முதலமைச்சர் முக ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; வதந்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு -சென்னை சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
- 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய தனியார் அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் கைது
- நாட்டை குடும்பமாக பார்க்க வேண்டும்; பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.வில் இணைந்த நிர்மல்குமாருக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துவது ஏன்? 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்
- இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய ரூபாய்; இந்தியா - இலங்கை அரசு ஆலோசனை
- தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக வதந்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை பிடிக்க தமிழக போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.
- மத்தியபிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தொடங்கிவைத்தார்.
- அரபிக்கடலில் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது.
- பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது? என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம்:
- கடந்த இரண்டு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோயிகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
- பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் ரோயல் டேகோமா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியினை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தி உள்ளது.
- நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.
- பெங்களூர் அணிக்கு எதிரான மகளிர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- ஹைதராபாத்தில் தனது கடைசி போட்டியில் ஆடிய சானியா மிர்சா கண்ணீர் மல்க விடைபெற்றார்.
- மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீராங்கனை என்ற சாதனையை தாரா நோரிஸ் படைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion