மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன..? அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள்.. 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை பயந்து இருக்கிறது - பதவிநீக்கம் விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து
  • ராகுல் காந்தியின் பதவி பறிப்பு ஜனநாயக படுகொலைக்கு சமமானது - கனிமொழி:  திட்டமிட்ட அரசியல் சதி என திருமாவளவன் காட்டம்
  • ஆன்லைன்  சூதாட்ட தடை மசோதா - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைப்பு
  • என்.எல்.சி விவகாரத்தில் தேவைக்கு அதிகமாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
  • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காத விவகாரம் - மாணவர்களை தேர்வு எழுதவைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
  • ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
  • 8 மாதங்களுக்கு பிறகு குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு முடிவு வெளியானது. தேர்வர்கள் தேர்வு முடிவை பார்க்க இணையதளத்தை ஒரே நேரத்தில் அணுகியதால், டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் முடங்கியது
  • மார்ச் 31ம் தேதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்த சென்னை மாநகராட்சி வலியுறுத்தல் - நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் 2 சதவிகிதம் அபராதம்
  • கோவை, திண்டுக்கல், திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
  • நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

இந்தியா

  • உஜ்வாலா திட்டத்திற்கான சமையல் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு - பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்வு - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
  • அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற விவகாரம் - ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கியது நாடாளுமன்ற செயலகம்
  • நாட்டிற்ஜ்காக எந்த விலையையும் கொடுக்க தயார் - இந்தியாவின் குரலுக்காக போராடுவதாகவும் ராகுல் காந்தி டிவீட்
  • சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை - ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்துரையாடல்
  • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்
  • திருடனை திருடன் என்று கூறுவது நாட்டில் குற்றமாகிவிட்டது - ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே காட்டம்
  • பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி - லண்டனில் தங்கியிருந்த விடுதியில் கீழே விழுந்ததில் காயம்

உலகம்

  • செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுதம் கடலுக்கு அடியில் பரிசோதனை செய்ததாக வடகொரியா தகவல்
  • அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டுகள் சிறை
  • மெட்டா குழும நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கிற்கு மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை -இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
  • பிரான்சில் ஓய்வு வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த எதிர்ப்பு - ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல்
  • உலகளவில் வெளியானது டிவிட்டர் ப்ளூ டிக் சேவை - கட்டணம் செலுத்தாவிட்டால் ஏப்ரல் 1 முதல் ப்ளூ டிக் அகற்றம்

விளையாட்டு

  • மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியில் டெல்லியை வீழ்த்தியது மும்பை அணி - நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதல்
  • உலகக்கோப்பை  துப்பாக்கிச் சுடுதல் - வெண்கலம் வென்றார் இந்திய வீரர்  ருத்ராங்ஷ் பட்டீல்
  • மியாமி  ஓபன் டென்னிஸ் போட்டி:  2வது சுற்றில்  ரைபகினா,  லினெட் வெற்றி
  • சர்வதேச ஆடவர் கால்பந்தாட்டம் - அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்த போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
Breaking News LIVE: மதுவிலக்கு திருத்தச் சட்டம் இன்று சட்டப்பேரவையில் அறிமுகம்
Breaking News LIVE: மதுவிலக்கு திருத்தச் சட்டம் இன்று சட்டப்பேரவையில் அறிமுகம்
7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!
1 year of Maamannan: சாதி அரசியல் சாயலை வெளுத்த மாரி செல்வராஜ்! 'மாமன்னன்' வெளியான நாள் இன்று!
1 year of Maamannan: சாதி அரசியல் சாயலை வெளுத்த மாரி செல்வராஜ்! 'மாமன்னன்' வெளியான நாள் இன்று!
Embed widget