உருவானது காற்றழுத்தம்: எங்கு கனமழை பெய்யும்?- வானிலை அப்டேட்!
Tamilnadu Weather: வங்கக்கடலில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07-04-2025) காலை 08. 30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (08-04-2025), வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும். மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து, தென்மேற்கு வங்கக் கடல் வழியாக தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை தொடர்பான தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இன்றைய வானிலை ( 07-04-2025 ):
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை ( 08-04-2025 ):
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09-04-2025 முதல் 13-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: இந்தியா, பாகிஸ்தானுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: எதற்காக?
Also Read: போடுங்க வெடிய! திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் ரெடி! திறப்பு தேதி வெளியானது: திறப்பது யார் ?
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
நாளை (08-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோர பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்:
07-04-2025 முதல் 09-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
10-04-2025 மற்றும் 11-04-2025: தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
07-04-2025: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
08-04-2025: தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு மீனவரக்ள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்களை வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















