TN Weather update: மக்களே உஷார்...! நாளை முதல் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - முழு விவரம் உள்ளே
கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல் படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 2 செ.மீ மழை பெய்துள்ளது.
கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மழைக்கு வாய்ப்பு:
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 7, 2023
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல் படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 2 செ.மீ மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 7, 2023
கடும் பனி:
முன்னதாக தமிழ்நாட்டில் வடகிழக்கு நிறைவடைந்தது முதல் கடந்த சில மாதங்களாக கடும் பனி நிலவத் தொடங்கியது. காற்று வீசும் திசை மாறுபாடு காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், சென்ற மாதங்களில் சென்னையில் அதிகாலை வேளைகளில் கடும்பனி மூட்டம் அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிய நிலையில், சென்னை மக்கள், சென்னை ஸ்நோ போன்ற ஹேஷ்டேக்ஸில் ட்விட்டரில் புலம்பும் அளவுக்கு பனியின் உக்கிரம் அதிகரித்தது.
நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும்பனிமூட்டத்தால் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை வாகன ஓட்டிகள் உபயோகிக்க அவர்களது இயல்புவாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தான் வெயிலின் பனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில், தென் தமிழக மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.