மேலும் அறிய

TN Weather Update: கொளுத்தும் வெயில்.. கரூரில் 44 டிகிரி செல்சியஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இதன் காரணமாக இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

மே 7 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

02.05.2024 முதல் 06.05.2024 வரை:

அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய   மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°  செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும்.

ஈரப்பதம்: 

02.05.2024 முதல் 06.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

02.05.2024 & 03.05.2024: வட  தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

04.05.2024 முதல் 06.05.2024 வரை:  வட  தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44.0° செல்சியஸ் (இயல்பை விட +7.2° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 43.7° செல்சியஸ், ஈரோட்டில் 43.6° செல்சியஸ்,  திருச்சியில் 43.1° செல்சியஸ், திருத்தணியில் 42.5° செல்சியஸ்  பதிவாகியுள்ளது.

தர்மபுரி & சேலத்தில் 41.5° செல்சியஸ்,   மதுரை (நகரம் & விமான நிலையம்) மற்றும் திருப்பத்தூரில்  41.4° செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 41.0° செல்சியஸ், சென்னை மீனம்பாக்கத்தில் 40.7° செல்சியஸ்,  கடலூரில்  40.2° செல்சியஸ் மற்றும் பாளையம்கோட்டையில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.7° செல்சியஸ் (+.3.5° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39.0° செல்சியஸ் (+2.9° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

02.05.2024 முதல் 05.05.2024 வரை: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Kuwait Fire Tragedy: ‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
Salem Leopard: சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kuwait Fire Accident : குவைத்தில் நடந்த கொடூரம்! இந்தியர்களின் நிலை என்ன? ராகுல் சரமாரி கேள்வி!Senji Masthan Vs DMK : மகன் ,மருமகன் அலப்பறை மஸ்தான் குடும்பம் ALL OUT! அடித்து ஆடும் ஸ்டாலின்Kanimozhi on BJP : ”பாஜக ஆட்சி நிலைக்காது! நல்ல விஷயம் சொன்ன சு.சுவாமி” கனிமொழி சூசகம்Pawan Kalyan Profile | மோடியின் செல்லம்..சந்திரபாபுவின் ’சேகுவாரா’! பவர்ஸ்டார் வென்ற கதை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Kuwait Fire Tragedy: ‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
Salem Leopard: சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!
Breaking News LIVE:வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க திங்கட்கிழமை வரை அவகாசம்
Breaking News LIVE: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க திங்கட்கிழமை வரை அவகாசம்
Chandrababu Naidu: ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு; 5 கோப்புகளில் அதிரடி கையெழுத்து- என்ன தெரியுமா?
Chandrababu Naidu: ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு; 5 கோப்புகளில் அதிரடி கையெழுத்து- என்ன தெரியுமா?
TNPSC Exam: கணிதம், சட்டம், பொருளாதாரம் படித்தவர்களா? அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
TNPSC Exam: கணிதம், சட்டம், பொருளாதாரம் படித்தவர்களா? அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை -  பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை - பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி
Embed widget