TN Rains: மக்களே அலர்ட்! தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு கனமழை, மிக கனமழைதான் - முழு விவரம்
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிைலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:
தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது
கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு:
தமிழ்நாட்டில் நாளை திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல், திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வரும் 13ம் தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 14ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிசச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 15ம் தேதி மிக கனமழை வாய்ப்பு:
15ம் தேதி திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இந்த மாத தொடக்கம் முதலே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழையும், மிக கனமழையும் மாறி, மாறி பெய்யும் என்று வானிலை ஆய்வ மையம் தகவல் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு போதியளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மழை நீர் போதியளவு தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.