TN Rain Update: சென்னையில் பரவலாக மழை - தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம் என்ன? எங்கெல்லாம் மழை வரும்?
TN Rain Update: சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
TN Rain Update: தமிழ்நாட்டில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் பரவலாக மழை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, கோயம்பேடு, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவானது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் பகல் நேரங்களில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது சென்னை மாநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, வடமாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை:
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
04.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05.11.2024 மற்றும் 06.11.2024: தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.11.2024: தமிழகத்தில் உரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.11.2024 மற்றும் 09.11.2024: தமிழகத்தில் வருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் கசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை வட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுகான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்:
07.11.2024: வடதமிழக கடலோரப்பதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
05.11.2024: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.11.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55
07.11.2024: தென்மேற்ற மற்றும் அதனை லட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கிலோ மீட்டர்
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.