மேலும் அறிய

TN Rain Update: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை? வானிலை மையம் எச்சரிக்கை

TN Rain Update: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN Rain Update: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:

வானிலை மைய அறிக்கையின்படி, “நேற்று  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (09-11-2024)  காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.  இதன்  காரணமாக,  அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். 

 நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி,  இன்று (09-11-2024) தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில்   நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை:

09.11.2024: தமிழகத்தில்   ஓரிரு   இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி
மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

10.11.2024: தமிழகத்தில்   ஓரிரு   இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.11.2024: தமிழகத்தில்   ஒருசில இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13.11.2024: தமிழகத்தில்   அநேக இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

சென்னை & புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   

தமிழக கடலோரப்பகுதிகள்: 

09.11.2024 மற்றும் 10.11.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்   பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.11.2024 மற்றும் 12.11.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

09.11.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.11.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!
மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Trump Vs Canada: ‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
Embed widget