TN Powern Shutdown: திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் இன்று மின்வெட்டு! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக இன்று முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
இன்று மின் தடை ஏற்ப்படும் மாவட்டங்கள்?
திருப்பூர்
விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கள்ளியம்புதூர், வீர சங்கலி, பல்லகவுண்டம்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே. தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கயம் பாளையம் மற்றும் பழனிகவுண்டன்பாளையம்
உடுமலை பகுதி:
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி,
ஈரோடு
சூரியம்பாளையம்,சி.எம்.நகர், குறிஞ்சி நகர், போலீஸ் குடியிருப்பு, ஜவுளி நகர், சூரியம்பாளையம், சூரியா நகர், அமராவதி நகர், சின்னத்தோட்டம், ஆர்.என்.புதூர், ராஜீவ் நகர், மங்களதுறை, மாயபுரம்
கோவை
மதுக்கரை, க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்., நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி
சேலம்
பலத்தானூர், சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, சந்துமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டனூர், ரெங்கனூர், கனுக்கானூர், சின்னவேலாம்பட்டி, கோனஞ்செட்டியூர், பெரியகுட்டிமடுவு























