Chennai Mayor Priya: செங்கோல் ஏந்தி சென்னை மேயராக அரியணையில் அமர்ந்த ப்ரியா ராஜன்!
சென்னை மாநகராட்சியின் மேயராக ப்ரியா ராஜன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த ப்ரியா ராஜன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற பிரியா ராஜனிடம் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்ரமணியன் ஆகியோர் செங்கோல் கொடுத்து மேயர் இருக்கையில் அமர வைத்தனர். புன்னகையுடன் செங்கோலை பெற்றுக்கொண்ட பிரியா பதவி பிரமாணத்தை ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் 178 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராக ப்ரியா ராஜன் பதவியேற்று கொண்டார். பிரியா ராஜா 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர். தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3ஆவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர்.
Tamil Nadu | Greater Chennai Corporation gets its youngest and first-ever Dalit woman mayor, as DMK's R Priya takes the oath of office in Chennai. The 29-year-old is Chennai’s third woman mayor. pic.twitter.com/erfAt365h0
— ANI (@ANI) March 4, 2022
இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வட சென்னையைச் சேர்ந்தவர் மேயராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை மேயராகத் தென் சென்னை பகுதியைத் சேர்ந்த மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:TN Mayor Election Result 2022 LIVE: கூட்டணி கட்சிகளின் கனவில் கல் எறிந்த திமுக... பல இடங்களில் மறியல், தடியடி... பதட்டம்!