உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு..
உள்ளாட்சித் தேர்தலுக்கான ஒத்துழைப்பினை அனைத்து அரசியல் கட்சிக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முன்னதாக கேட்டுக் கொண்டார்
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்க்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் செயதியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதியதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் மற்றும் 2019-ல் தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அய்கிச்ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திராமிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மார்க்சிப்ட் கம்யூனிப்ட் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அனைத்திந்திய திரினாமுல் காங்கிரசுப், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிராப் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய சுட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு நடப்பில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கார் பட்டியல்களில் உள்ள விவரங்களைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகருக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டவாறு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும், அதற்கான ஒத்துழைப்பினை அனைத்து அரசியல் கட்சிக்கும் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்து 1.9.2021 அன்று ஆணை வெளியிட்டுள்ளது. கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிடவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவினை நடத்திடவும் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் மேற்படி ஆணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.