TN Govt Pongal Gift | தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்பு : 20 பொருட்கள் என்னென்ன?
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தை பொங்களுக்கு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை(Pongal Parisu Thoguppu) வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தத் தொகுப்பில் பொங்களுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, மல்லித்தூள், கடுகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களை 2,15,48, 060 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 88 கோடி செலவில் வழங்கப்பட இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று ரேசன் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக, பொங்கல் பண்டிகைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 2,500 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Breaking Live: தமிழக மழை பாதிப்புகளை பார்வையிட 6 பேர் கொண்ட மத்தியக்குழு இன்று புறப்படுகிறது#TNRains https://t.co/KidmcVk17R
— ABP Nadu (@abpnadu) November 17, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

