TNEB Power Supply: கோடையில் மின்வெட்டா? நைட் ஃபுல்லா குளுகுளுன்னு தூங்கலாம் - எப்படி? தமிழ்நாடு அரசின் புதிய பிளான்
TNEB Power Supply: கோடைகாலத்தில் இரவு நேர மின்வெட்டை தவிர்க்க கூடுதல் மின்சாரத்தை வாங்க, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

TNEB Power Supply: கூடுதல் மின்சார கொள்முதலால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இரவு நேரங்களில் மின்வெட்டு எற்படாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
வதைக்கும் கோடை வெயில்:
மே மாதத்தில் தான் கோடை வெயில் வாட்டி வதைக்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களாக மார்ச் மாதம் முதலே வெயில் சுட்டெரிக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல், வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் தொலைக்காட்சி, ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்களின் பயன்பாடு பெருமளவு அதிகரிக்கிறது. அதன் விளைவாக மின்சார பயன்பாடும் அதிகரிக்கிறது.
வாட்டும் மின்வெட்டு:
இதனிடையே, தற்சார்பு அடையும் அளவிற்கு தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி நிகழ்வில்லை என்பதே உண்மை. அதன் காரணமாக வெளிசந்தைகளில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் கோடை காலங்களில் மின்சார பயன்பாடு பெருமளவு அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் மின்வெட்டும் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினறனர். குறிப்பாக இரவு நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளை வைத்திருப்பவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்க மின்விசிறி அல்லது ஏசி இல்லாமல் வீடுகளில் இரவு நேரங்களில் துங்கவும் முடிவதில்லை. இந்த சூழலை தவிர்க்கும் வகையில் தான், நடப்பாண்டு கோடை காலத்தில் இரவு நேர மின்வெட்டை தவிர்க்க தமிழ்நாடு அரசு கூடுதல் மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
3,910 MW மின்சாரம் தினசரி கொள்முதல்:
வெளியாகியுள்ள தகவல்களின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் குறிப்பாக இரவு நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஏப்ரல் மாதத்தில் தினசரி மொத்தம் 3,910 மெகாவாட் (MW)க்கான குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 12 மணிநேரத்திற்கு 2,610 மெகாவாட் மின்சாரம் மற்றும் ஆறு மணி நேரத்திற்கு கூடுதலாக 1,300 மெகாவாட் மின்சாரம் மொள்முதல் செய்யப்படுகிறது. மழை மற்றும் பிற காரணங்களால் மாநிலத்தில் மின் தேவை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காவிட்டாலும் ஒப்பந்தப்படி மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தில், 1,300 மெகாவாட் முதல் காலகட்டத்திற்கு அதாவது நள்ளிரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை அதிகரித்துள்ள இரவு நேர தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. 2,610 மெகாவாட் மின்சாரமானது மாலை நேர பீக் ஹவர்களின் போது ஏற்படும் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
கோடைகால மின்வெட்டிற்கு ”நோ”
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் அதிகப்படியான மின்சார தேவையை கருத்தில் கொண்டு, 6,000 மெகாவாட் மின்சாரம் கொமுதல் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் தெரிவித்தார். இதற்கான, இரண்டு மாதங்களுக்கு நிகழும் கூடுதல் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கைக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் கோடைகாலங்களில் மின்வெட்டு இருக்காது எனவும், பொதுமக்கள் இரவில் நிம்மதியாக தூங்கலாம் என்று அரசு தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.
மின்சார வாரியத்தின் ஒப்பந்த திட்டம்:
தொடர்ச்சியாக மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு பதிலாக, குறிப்பிட்டதேவை அதிகரிக்கும் நேரங்களுக்கு மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது. இதுதொடர்பாக TNPDCL அதிகாரி ஒருவர் கூறுகையில், "பகலில், எங்களிடம் சூரிய ஒளி உற்பத்தி உள்ளது. சூரிய ஒளி அல்லாத நேரங்களில் மட்டுமே மின் தேவையை சந்திப்பது சவாலாக இருக்கும், எனவே அந்த மணிநேரங்களுக்கு நாங்கள் ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்கிறோம்" என்று குறிப்பி
ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு பிறகு மின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என்று TNPDCL எதிர்பார்க்கிறது. இமழையின் தாக்கம் குறைவது மற்றும் பகல்நேர வெப்பநிலை அதிகரிப்பை சார்ந்துள்ளது. மே மாதத்தில், TNPDCL ஆனது மே 10 ஆம் தேதி வரை குறிப்பிட்ட அளவிலான மின்சாரம் மட்டுமே வாங்குகிறது. முந்தைய இரண்டு ஆண்டுகளில் பதிவான கோடைகால மழைப்பொழிவு அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மின்சார பயன்பாடு:
2024 ஆம் ஆண்டில், அதிகபட்ச தினசரி மின் நுகர்வு மே 2, 2024 அன்று 454.320 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். இந்த ஆண்டு, ஏப்ரல் மாத நடுப்பகுதியிலேயே மாநிலம் இந்த இலக்கைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சார தேவையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் உச்சமான 20,830 மெகாவாட் ஏப்ரல் 30 அன்று எட்டப்பட்டது. இந்த ஆண்டு தேவை 22,150 மெகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதலே தமிழ்நாட்டில் தினசரி மின்சார பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.





















