மேலும் அறிய

TN governor RN Ravi: ஐந்தாவது நாளில் டெல்லி பறந்த ஆளுநர்... அமித்ஷா சந்திப்பு ஏன்?

ஏற்கெனவே ரவி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் தெரிவித்தன. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தின.

ஆளுநராக- பதவியேற்ற பிறகு ஆர்.என்.ரவி  முதல்முறையாக டெல்லி சென்றுள்ளார். அங்கு  இரண்டு நாட்கள் தங்கியிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு மற்றும்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளார். இந்நிலையில் பதவியேற்று 5 நாட்களே ஆன நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

காரணம்  முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமானவர். வழக்கமாகவே ஆளுநர்கள் மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டாலும் புலனாய்வு அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது அரசியல் வட்டாரங்களில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. 

TN governor RN Ravi: ஐந்தாவது நாளில் டெல்லி பறந்த ஆளுநர்... அமித்ஷா சந்திப்பு ஏன்?

கடந்த 18ம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார் ரவி. அந்த நாளே வழக்கத்திற்கு மாறாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்ததை போல, மாவட்ட அளவில் நீங்கள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு இப்போதுதான் பதவியேற்றுள்ளேன், போக போகத்தான் எனது செயல் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என பதிலளித்தார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர்- 20ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக  கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து 21ந்தேதி  காலை தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவை ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து பேசினார் ஆளுநர் ரவி. அப்போது, தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் நடத்திய போராட்டங்கள் குறித்து  விசாரித்ததாக கூறப்படுகிறது. அதேபோல உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் நேரில் அழைத்து பேசியுள்ளார். ஆளுநர், அரசு சம்பந்தமாக ஏதேனும் தகவல் பெற தலைமைச்செயலாளரைத்தான் நேரில் அழைத்து பேசுவது வழக்கம். ஆனால், புதிய ஆளுநர் வழக்கத்துக்கு மாறாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். இது தமிழக அரசை கொதிப்படைய செய்துள்ளது.

முன்னதாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதேபோல நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றும் போல ஏழு பேர் விடுதலை தொடர்பாக முந்தைய ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத்தலைவருக்குத்தான் அதிகாரம் என  அவருக்கு அனுப்பி வைத்துவிட்டார். இந்நிலையில் எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து இதுகுறித்தெல்லாம் குடியரசுத்தலைவரிடம் ஆளுநர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TN governor RN Ravi: ஐந்தாவது நாளில் டெல்லி பறந்த ஆளுநர்... அமித்ஷா சந்திப்பு ஏன்?

2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்கும் இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வருமா எனும் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

ஏற்கெனவே ரவி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் தெரிவித்தன. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தின. மேலும் தமிழகம் போன்ற அமைதி நிலவும் மாநிலத்துக்கு உளவுத்துறை பின்னணி கொண்டவரும், தனிநாடு கேட்கும் நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஒருவரை ஏன் ஆளுநராக நியமிக்க வேண்டும் என சிலர் கேள்வியெழுப்பினர். இந்த சூழலில் பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமான ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திப்பதன் மூலம் அடுத்த மூவ் என்னவாக இருக்கும், திமுக அரசுக்கு செக் வைக்க போகிறாரா? எனும் கேள்விகளும் எழுகின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget