மேலும் அறிய

பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க, POSH சட்டத்தின் கீழ் பள்ளிகளில் குழு - மாநில குழந்தைகள் கொள்கை அறிக்கை 2021

பாதுகாப்பான குழந்தைநேய சுற்றுச்சூழலை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பான குழந்தைநேய சுற்றுச்சூழலை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியானதொரு குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்கள். மேலும் வன்முறை, சுரண்டல், தவறாக நடத்தப்படுதல் (சொல், உடல், மனம், பாலியல் ரீதியாக உள்ளிட்டஅனைத்து விதத்திலும்), புறக்கணிப்பு, அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் இருப்பது மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாகவும். கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கும் தகுதி உடையவர்கள்; எனினும், உலகம் முன் எப்போதையும் விட வேகமாக மாறி வருகிறது. 

அதைப்போலவே குழந்தைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்களுடன் வாய்ப்புகளும் மாறி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; உலகளாவியவை.

தமிழ்நாட்டில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தனது கடமையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், அதற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடையவும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021ஐ உருவாக்கியுள்ளது.

அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அனுபவிக்கவும் மற்றும் வன்முறை, சுரண்டல், புறக்கணிப்பு, பற்றாக்குறை மற்றும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற தகுதியுடையவர்கள் என்பதை அரசு அங்கீகரிக்கிறது.

அதே நேரத்தில், மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்கள் உரிமைகளைப் பெறவும் அவர்களுக்குப் பாதுகாப்பான குழந்தைநேய சுற்றுச்சூழலை உருவாக்க தேவையான அடித்தளத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.

எனவே மாநில அரசு பின்வரும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

1. பல்வேறு வகையில் தவறாக நடத்தப்படுதல் (உடல், உணர்வு, பாலியல், புறக்கணிப்பு, மறுப்பு மற்றும் இணையவழி சார்ந்த), பாகுபாடு, சுரண்டல், வன்முறை அல்லது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது அவர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் எல்லா செயல்பாடுகளிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சமூகம் சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலைநிறுத்துதல்.

2. தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கு எதிரான எந்த விதமான வன்முறைக்கும் முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற எனும்
கொள்கையை கடைப்பிடிக்கிறது. மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளைத் தடுப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது.  

3. தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதற்காக அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற
அமைப்புகளில் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் மற்றும் கடைபிடித்தல்.

4. அனைத்துப் பள்ளிகளையும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்ற குழந்தைப் பாதுகாப்புக் கொள்கையை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துதல்.

5. பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு சட்டத்திலிருந்த (றிளிஷிபி) சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் புகார் குழுவை அமைத்தல்.

6. தற்போதுள்ள குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளை, குறிப்பாக கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு (க்ஷிலிசிறிசி) மற்றும் அருகாமை குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்துதல்.

7. குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள், அந்த வன்முறைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறைத் தாக்கம், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அவர்கள் அணுக வேண்டிய சட்டங்கள்/ நிறுவனங்கள், போன்றவற்றிற்கு அணுக வேண்டிய அமைப்புகள் குறித்து அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அனைத்து வகையான ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தல்.

8. அனைத்து குழந்தைகளின் (பாலினம், மதம், மொழி, சாதி, மாற்றுத்திறன் மற்றும் மன ரீதியான குறைபாடு, சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அனைவருக்கும்) உரிமைகள் மற்றும் கண்ணியம் (மாண்பு) எப்போதும் நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்தல்.

9. பாதுகாப்பான, மரியாதையான பராமரிப்பு, குழந்தை நேய, பொதுக் கற்றல், ஊடக மற்றும் இணைய வெளிகளை உருவாக்குதல்.

10. சிறப்பு கவனம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரித்தானவற்றை அவர்கள் பெறுவதை உறுதிப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.  

11. குடும்பப் பராமரிப்பு / மாற்றுப் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன பராமரிப்பை கடைசி முயற்சியாகக் கருதுதல்.

12. அனைத்துக் குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்களிலும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புறுதியை மிக உயர்ந்த தரத்தில் அமல்படுத்துதல்.

13. குற்றத்தடுப்பு மற்றும் பொறுப்பான எதிர்வினையாற்றும் ஒரு குழந்தை பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைத்தல், பல்வேறு வகையில் தவறாக நடத்தப்படுதல், புறக்கணித்தல், பாகுபாடு, சுரண்டலுக்கு எதிராக நிர்வாக செயல்பாடுகள். மற்றும் சட்டங்களை திறம்பட அமலாக்கம் செய்வதையும் ஊக்குவித்தல்.

14. குழந்தைகளின், குறிப்பாக சிறப்பு கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பொருத்தமான மற்றும் திறன்மிக்கவர்களாக்க குழந்தைகள் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் திட்டங்களை வலுப்படுத்துதல்.

15. தங்களின் பாதுகாப்புக்கென இருக்கும் சேவைகள் மற்றும் அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் மேம்படுத்துதல்.

16. ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திறன் வாய்ந்த குழந்தைப் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு துறைகளுடன் இணைந்து திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துதல்.

17. குழந்தைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டறிந்து, தலையிட்டு தீர்வு காண கிராமம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அமைப்புகளை உருவாக்குதல்.

18. மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த-சமூக ஆதரவில் சிறப்புக் கவனம் செலுத்தி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் கீழ் மறுவாழ்வு சேவைகளை தரம் உயர்த்துதல்.

19. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படும் குழந்தைகளின் தனியுரிமையை உறுதி செய்தல்; அவர்கள் தொடர்பான தரவுகளை ரகசியமாக வைத்திருத்தல்.

20. கண்காணிப்பு, மதிப்பீடு செய்தல் மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்கு, நிகழ்காலத் தரவை வழங்க, தரவுக் களஞ்சியம் மற்றும் தரவு மேலாண்மை அமைப்புகளின் தயார்நிலையை வலுப்படுத்துதல்.  

21. நிறுவனங்களுக்குள் குழந்தைகள் வருகையைத் தடுக்கவும் குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டு நிறுவனங்களுக்குள் மீண்டும் வருவதைத் தடுக்கவும் குடும்ப அமைப்புகளை வலுப்படுத்தும் சேவைகளை உருவாக்குதல்.

22. குறிப்பாக, குழந்தைப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த விழிப்புணர்வு சாதனங்களை (தகவல், கல்வி) உருவாக்கி அதன் மூலம் சமூக விழிப்புணர்வை அதிகரித்தல்.

23. பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் குழந்தைகள் மீண்டும் பாதிக்கப்படாமல் தடுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்தல்.

24. நிறுவனப் பராமரிப்பை விட்டு வெளியேறும் குழந்தைகள் சுயசார்பு பெறும் வரை அவர்களுக்குப் தொடர் பராமரிப்புச் சேவைகளை பலப்படுத்தல்.

25. குழந்தைப் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கும் போது சரியான முடிவுகள் எடுப்பதை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது மதிப்பீடுகள், ஆய்வு மற்றும் சமூகத் தணிக்கைகளை நடத்துதல்.

26. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்.

27. பல்வேறுபட்ட நிலைகளில் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குறைதீர் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்.

சர்வதேச குழந்தைகள் தினமான இன்று இந்தத் தகவலைத் தெரிந்து கொள்வதோடு, பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget