TN Government Twitter Hack: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோகரன்சி விளம்பரம்! ஹேக்கர்கள் அட்டூழியம்!
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி தொடர்புத்துறை நிறுவனமான TNDIPR ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. நேற்று இரவு 1.30 மணி அளவில் இந்த ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
Glveaway!! Infoooo! https://t.co/ot3dtRsQPo
— TN DIPR (@TNDIPRNEWS) December 31, 2022
இதில் கிரப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
The interns just told me it was not an official South Park episode. 😂 it was community made. Guess will have to wait longer. https://t.co/VrInXWu4wL
— CZ 🔶 Binance (@cz_binance) December 31, 2022
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கினை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு சில மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டிருந்தது. பின்பு சில மணி நேரத்திலே அவரது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது.
தற்போது. தமிழக அரசின் செய்தி தொடர்புத்துறை வெளியிடும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் செய்தி அறிவிப்புகள் ஆகியவை @TNDIPR என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும்.
Happy New Year 2023! https://t.co/NuUliQIkbb
— TN DIPR (@TNDIPRNEWS) December 31, 2022
ஆனால் நேற்று இரவு 1.30 மணி முதல் மர்ம நபர்களால் இந்த ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து தகவல்கள் மாயமாகி உள்ளது. அதற்கு பதில் கிரப்டோகரன்சி விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், எலான் மஸ்க் புகைப்படத்துடன் டெஸ்லா விளம்பரங்கள் இதில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ட்விட்டர் கணக்கினை பின்தொடர்பவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனை மீட்டெடுக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க