மேலும் அறிய

DGP Sylendra Babu: தவறாக நடந்த காவலர்? ட்வீட் செய்த இளம்பெண் - வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திர பாபு!

காவலர் ஒருவர் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்ததாக பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து சில புகார்கள் மற்றும் விமர்சனங்களும் எழும். அந்தவகையில் தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது. காவலர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக  பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். 

இது தொடர்பாக அப்பெண், “நேற்று ஈசிஆரின்  ஷீ ஷேல் பகுதியில் பணியில் இருந்த காவலரின் செயல் மிகவும் மோசமானதாக அமைந்தது. நேற்று அலுவலக நேரத்திற்கு பிறகு நானும் என்னுடைய நண்பரும் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்கு கடற்கரைக்கு செல்ல நேரம் இருப்பது தெரியாது. 

அதற்காக அங்கு பணியிலிருந்த காவலர் எங்களிடம் ஒரு தீவிரவாதியிடம் நடந்து கொள்வதை போல் நடந்து கொண்டிருந்தார். அத்துடன் அவர் நீங்கள் இது போன்று வட இந்தியாவில் 10 மணிக்கு மேல் சுற்றுங்கள் என்று கூறினார். தமிழ் பேச தெரியாது என்பதற்காக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான் எப்படி வட இந்தியராக இருப்பேனா? அவருக்கு நான் பதிலளித்த பிறகு அவர் என்னை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்வேன் என்று மிரட்டினார். கடற்கரைக்கு செல்லும் நேரம் எதுவும் அங்கே நோட்டீஸாக ஒட்டப்படவில்லை. முதலில் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று காவலர்களுக்கு கற்று கொடுங்கள். அவர் அப்படி என்னிடம் நடந்து கொள்ள நான் ஒன்றும் குற்றவாளி அல்ல” எனப் பதிவிட்டுள்ளார். 

அவரின் இந்தப் பதிவிற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஒரு பதிவை செய்துள்ளார். அவர் தமிழ்நாடு காவல்துறையினர் பக்கத்தின் மூலம் இந்தப் பதில் பதிவை செய்துள்ளார். அதில், “உங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget